இனி.. இலவசம்!! பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
திருப்பதி மலையில் உள்ள ஏடிசி பகுதியில் இந்தத் திட்டத்தைத் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தொடங்கி வைத்துள்ளார்.
திருப்பதி
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22 லட்சத்து 42 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
இதன் மூலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 125 கோடி ரூபாய் காணிக்கை மூலம் கிடைத்துள்ளது. மேலும் 1 கோடியே 6 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ,கோவில் வளாகத்தில் பக்தர்களிடம் நாமம் இட 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை வசூல் செய்யப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.அதிலும் ஒரு சிலர் கோவிலுக்கு வரும் பக்தர்களைவழிமறித்து நெற்றியில் திருநாமம் இட்டு அதிக அளவில் பணம் வசூலிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இலவ திருநாமம்
இந்தச் சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்காகத் தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நெற்றியில் இலவசமாகத் திருநாமம் இட ஸ்ரீவாரி சேவா தொண்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் திருப்பதி மலையில் உள்ள ஏடிசி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் திருப்பதி கோவிலில் திருநாமம் இடுவதற்குக் கட்டணம் ஏதும் பக்தர்கள் செலுத்தத் தேவையில்லை. இந்தச் சேவை இனி இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.