திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம்
திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார்.
ஓ.பி.எஸ் சாமி தரிசனம்
புரட்டாசி மாத 3வது சனிக்கிழமையை முன்னிட்டு திருப்பதியில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் 48 மணி நேரம் காத்திருந்து இலவச தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனால் இலவச தரிசனத்திற்காக சுமார் 8 கிலோமீட்டர் தொலைவு வரை வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
மேலும், தங்கும் அறைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு அறைகள் கிடைக்காத பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
அதிகபட்சமாக வினாடிக்கு ஒன்றரை நபர் என்ற கணக்கில் ஒரு மணி நேரத்தில் 4, 800 பக்தர்கள் மட்டுமே சாமி கும்பிட வசதிகள் உள்ளன.
இந்த நிலையில் புரட்டாசி 3வது சனிக்கிழமையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் விளக்கேற்றி வழிப்பட்டார்.அண்மையில் இராமேஸ்வரம் கோவிலில் குடும்பத்தினருடம் தரிசனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.