கள்ள உறவில் ராணுவ வீரர் - மனைவியின் விபரீத முடிவால் துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை

Tirupathur
By Karthikraja Jul 04, 2024 12:55 PM GMT
Report

 கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக 4 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.

ராணுவ வீரர்

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த கொரட்டி பகுதியை சேர்ந்தவர் குப்பன். இவரது மகன் கணபதி 14 வருடமாக ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகரைச் சேர்ந்த வினோதினியை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் கிஷோர் என்ற ஆண் குழந்தை ஒன்று உள்ளது. 

tirupattur

இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சதீஷ்குமாரின் மனைவி சத்யாவிற்கும் தன்னுடைய கணவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது வினோதினிக்கு தெரிய வந்துள்ளது. தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த கணபதிக்கும் அவர் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சத்யாவும் கணபதியும் ஒன்றாக இருக்கும் ரகசிய வீடியோ அடங்கிய செல்போன் வினோதினிக்கு கிடைத்ததாக சொல்லப்படுகிறது. 

உயிர்த்தெழுவார் என நம்பிக்கை; தாய் உடலை வைத்து மகன் வினோத பூஜை - இறுதியில் நடந்தது என்ன?

உயிர்த்தெழுவார் என நம்பிக்கை; தாய் உடலை வைத்து மகன் வினோத பூஜை - இறுதியில் நடந்தது என்ன?

சடலமாக மீட்பு

அந்த செல்போனை வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனைவி வினோதினியை கணவன் கணபதி கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் மனமுடைந்த வினோதினி தன்னுடைய 4 வயது குழந்தையுடன் அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் குழந்தையுடன் குதித்த வினோதினியை காப்பாற்றி உள்ளனர்.

ஆனால் குழந்தை கிணற்று நீருக்குள் மூழ்கி விட்டதால் திருப்பத்தூர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரமாக போராடி குழந்தையை சடலமாக மீட்டனர். இதன் பின் பிரேத பரிசோதனைக்காக குழந்தையின் சடலத்தை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

tirupattur government hospital

இந்நிலையில் தகவல் அறிந்த சத்யாவும் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக 4 வயது குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.