உயிர்த்தெழுவார் என நம்பிக்கை; தாய் உடலை வைத்து மகன் வினோத பூஜை - இறுதியில் நடந்தது என்ன?

Perambalur
By Karthikraja Jul 03, 2024 01:30 PM GMT
Report

 தாயின் இறந்த உடலை வைத்து பூஜை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் முத்து நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் காரைக்குடியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஸ்ரீராம் என்பவர் தனது தாயுடன் கடந்த ஒரு ஆண்டு காலமாக வசித்து வந்துள்ளார்.  

perambalur

இந்நிலையில் சில நாட்களாக அவர்கள் வசித்த வீடு பூட்டப் பட்டிருந்தது. அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து அக்கம்பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். நேரில் வந்த காவல் துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். 

என் கூட வர மாட்டியா? போட்டுக்கொடுத்த முதல் கள்ளக்காதலன் - போட்டுத் தள்ளிய மகன்கள்

என் கூட வர மாட்டியா? போட்டுக்கொடுத்த முதல் கள்ளக்காதலன் - போட்டுத் தள்ளிய மகன்கள்

காவல் துறை

அங்கு அழுகிய நிலையில் 70 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டியின் உடலும், 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையிலும் இருந்துள்ளது. மேலும் இறந்து கிடந்த மூதாட்டியின் உடல் மேல் மஞ்சள், குங்குமம், எலுமிச்சை பழம், ஆரஞ்சு பழம், பத்தி, தர்ப்பைப்புல் உள்ளிட்ட பூஜை பொருட்கள் மற்றும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மசாலா பொருட்கள் ஆகியவை இருந்துள்ளன. 

perambalur house

உயிர்த்தெழுவார் என இறந்த தாயின் சடலத்திற்கு மகன் பூஜை செய்தாரா, அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததால் மனம் உடைந்து மகனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு நபர்கள் யாரேனும் இறந்த உடலை வைத்து பூஜை நடத்தினார்களா என பல்வேறு கோணத்தில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் கடந்த சில தினங்களாக ஸ்ரீராம் கடன் பிரச்சனையில் இருந்தாக அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.