என் கூட வர மாட்டியா? போட்டுக்கொடுத்த முதல் கள்ளக்காதலன் - போட்டுத் தள்ளிய மகன்கள்
தாயுடன் கள்ளக்காதலில் இருந்த நபரை மகன்கள் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் மனோரா அருகில் கருவேலங்காட்டில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் ரத்தகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அப்பகுதியினர் அவரை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில் உயிரிழந்த வாலிபர் மல்லிப்பட்டினம் செம்பருத்தி நகரை சேர்ந்த மீனவர் ராஜா (36) என தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் விக்னேஷ் (எ) விக்கி(22), அவரது தம்பி 17 வயது சிறுவன், மற்றும் அதே பகுதியை சேர்ந்த குமார் (51) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
கள்ளத்தொடர்பு
இவர்களிடம் நடத்திய விசாரணையில், மல்லிப்பட்டினம் செம்பருத்தி நகரை சேர்ந்த செல்வம் என்பவரின் மனைவி அபூர்வம் (45). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனியாக வாழந்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் விக்கி என்பவர் திருமணமாகி, தனியாக வசித்து வருகிறார். 2வது மகனுக்கு 17 வயதாகிறது. அவர் அதே பகுதியில் உள்ள இறால் பண்ணையில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.
அபூர்வத்திற்கு, அதே பகுதியை சேர்ந்த குமார் (51), ராஜா (36) ஆகிய 2 பேரிடமும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. பின்னர் குமாருடனான கள்ளத்தொடர்பை தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமார் அபூர்வத்தின் மகன்களிடம் உனது அம்மாவுக்கும், ராஜாவுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக போட்டுக்கொடுத்துள்ளார். ஆனால் அவரது மகன்கள் இதனை நம்ப மறுத்துள்ளனர்.
கைது
இந்நிலையில் அபூர்வம் ராஜாவுடன் ஒன்றாக இருக்கும் நேரம் பார்த்து அவரது மகன்களை அழைத்து வந்து நேரில் காட்டியுள்ளார். இதை பார்த்து ஆத்திரமடைந்த 2 மகன்களும், அங்கிருந்த இரும்பு கம்பியை வைத்து, ராஜாவை சரமாரியாக தாக்கியுள்ளார்கள். உயிருக்கு போராடி கொண்டிருந்த ராஜாவை, ரத்த காயங்களுடன் பைக்கில் ஏற்றிச்சென்று கருவேலங்காட்டில் வீசிவிட்டார்கள்.
இதனையடுத்து விக்னேஷ், விக்னேஷின் தம்பி, குமார் ஆகிய 3 பேரையுமே போலீசார் கைது செய்துள்ளனர். குமார், விக்கி ஆகிய 2 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விக்கியின் தம்பியை, திருச்சியிலுள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் சேர்த்துள்ளனர்.