கந்தர்வக்கோட்டையில் ஒரு கள்ளக்காதல் - குஷியில் திரும்பி சென்ற கணவர்

Tamil nadu Madhya Pradesh Pudukkottai
By Karthikraja Jun 26, 2024 12:00 PM GMT
Report

 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் நடந்த கள்ளக்காதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கந்தர்வகோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள கிராமத்தை சோ்ந்த 24 வயது இளைஞர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கூலி வேலைக்காக மத்திய பிரதேசம் சென்றுள்ளார். கொஞ்ச நாளில் ஹிந்தி பேச கற்று விட்டதால், அங்குள்ள 23 வயது வட மாநில பெண்ணுடன் சகஜமாக பழக துவங்கியுள்ளார்

gandarvakottai

அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தாலும், அந்த இளைஞருடன் நெருங்கி பழகியுள்ளார். மத்திய பிரதேசத்தில் கூலிவேலை முடிந்துவிட்டதால், கடந்த வருடம் அவர் சொந்த ஊரான கந்தர்வகோட்டைக்கு வந்துவிட்டார்.. ஆனாலும், அந்த பெண்ணும், இளைஞரும் செல்போனில் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். 

டேட்டிங் ஆப் மூலம் பழக்கம் - நேரில் சந்திக்கும் போது நடந்த அதிர்ச்சி சம்பவம்

டேட்டிங் ஆப் மூலம் பழக்கம் - நேரில் சந்திக்கும் போது நடந்த அதிர்ச்சி சம்பவம்

மத்தியபிரதேசம்

இந்நிலையில் 4 நாளுக்கு முன் அந்த வடமாநில பெண், மத்தியபிரதேச மாநிலத்திலிருந்து கிளம்பி இளைஞரை தேடி, கந்தா்வகோட்டைக்கு வந்துவிட்டார். இளைஞரின் வீட்டிலேயே 4 நாட்கள் தங்கி விட்டதால், மனைவியை காணவில்லை என அந்த பெண்ணின் கணவர் மத்திய பிரதேச போலீசில் புகார் அளித்துள்ளார்.  

illegal affair boy girl

விசாரணையில் அந்த பெண் கந்தர்வகோட்டைக்கு சென்று இளைஞருடன் தங்கியிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் மத்தியபிரதேச காவல் துறையுடன் கிளம்பி கந்தர்வகோட்டைக்கு வந்துள்ளார் அந்த பெண்ணின் கணவர்.

பெண் மீட்பு

அந்த இளம்பெண்ணை அழைத்து கொண்டு காவல் நிலையம் வந்த இளைஞர்,அந்த பெண்ணை தமிழ்நாட்டுக்கு நான் வரசொல்லவில்லை விருப்பப்பட்டு தான் கந்தர்வக்கோட்டை வந்துள்ளது. இது பற்றி, தனக்கு எதுவும் தெரியாது என இளைஞர் போலீசிடம் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பெண்ணை கணவருடன் அனுப்பி வைக்க சம்மதம் தேரிவித்துள்ளார். அந்த பெண்ணுடன் கணவருடன் செல்ல ஒப்புக்கொண்டு விட்டார். 

gandarvakottai police station

இதனையடுத்து அந்த பெண்ணை இளைஞரிடமிருந்து மீட்டு கணவரிடம் ஒப்படைத்த பின் அவர்கள் மத்திய பிரதேசம் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். கள்ளக்காதலனை தேடி வட மாநிலத்தில் இருந்து பெண் தமிழ்நாடு வந்ததும், மனைவி திரும்ப கிடைத்த மகிச்சியில் கணவர் சென்றதும் அங்கு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.