திருப்பதி ஏழுமலையானுக்கு சொந்தமான தங்கம் - எவ்வளவு இருக்கு தெரியுமா?
திருப்பதி ஏழுமலையானுக்கு சொந்தமான தங்கம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான்
ஆந்திரா, திருப்பதியில் ஏழுமலையான் கோயிலை தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது. ஏழுமலையானை காண உலக நாடுகளில் இருந்து லட்சக்கணக்கில் மக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.
அவர்கள் பணம், நகை என காணிக்கையை கொட்டி வருகின்றனர். அதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பக்தர்கள் ஏழுமலையானுக்கு நன்கொடையாகவும், காணிக்கையாகவும் 4 டன் தங்கம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
காணிக்கை விவரம்
அதனை பல்வேறு வங்கிகளின் தங்க முதலீட்டு திட்டத்தில் டெபாசிட் செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், தங்க டிபாசிட்டின் அளவு 11 டன் 329 கிலோவாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து, நடப்பு நிதி ஆண்டில் மட்டும் 1131 கிலோ தங்கம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் சுமார் 18,000 கோடி பணம் நிரந்தர வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது.
தேவஸ்தானத்தின் அன்னதான அறக்கட்டளை, ஸ்ரீவாணி கோவில் நிர்மான அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு அறக்கட்டளைகள் பெயரில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.