திருப்பதி பக்தர்களே.. இனி லட்டு மட்டுமில்லை, இதுவும்தான்!
திருப்பதி பக்தர்களுக்கு இனி 2 பிரசாதங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். தினமும் பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம் செய்கின்றனர்.
அந்த வகையில் பக்தர்களுக்கு தேவையான நடவடிக்கைகளை தேவஸ்தானம் செய்து வருகிறது. அந்த வகையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்காக லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
புத்தக பிரசாதம்
இந்த லட்டுவிற்கான பிரத்யேகமாக நெய் தயாரிக்கப்பட்டு திருப்பதிக்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இனி பக்தர்களுக்கு லட்டுடன் புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மேலும், திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்குக் காத்திருக்கும் பக்தர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்றும், புத்தகம் அச்சிடுவதற்கான செலவை ஏற்க நன்கொடையாளர்கள் முன் வந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.