உடைந்து நொறுங்கிய பாலம்; அந்தரத்தில் தொங்கிய லாரி - 9 பேர் உயிரிழப்பு!
பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர்.
பாலம் இடிந்து விபத்து
குஜராத், வதோதராவின் பத்ரா தாலுகாவில் மஹிசாகர் ஆற்றில் உள்ள காம்பிரா பாலத்தின் ஒரு பகுதி இடிந்தது. இதில் ஆற்றில் 5 வாகனங்கள் விழுந்ததில், 9 பேர் உயிரிழந்தனர்.
இரண்டு லாரிகள், ஒரு எஸ்யூவி கார் மற்றும் ஒரு பிக்அப் வேன் உட்பட நான்கு வாகனங்கள் பாலத்தைக் கடக்கும்போது திடீரென பாலம் இடிந்து விழுந்தது.
9 பேர் பலி
பாலத்தில் சென்று கொண்டிருந்த பைக், கார் உள்ளிட்ட வாகனங்களும், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களும் மகிசாகர் ஆற்றில் கவிழ்ந்தன. அப்போது லாரி ஒன்று அந்தரத்தில் தொங்கியபடி இருந்தது.
உடனே தீயணைப்புப் படை குழுக்கள், உள்ளூர் காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.
இந்நிலையில் மத்திய குஜராத்தை சவுராஷ்டிராவுடன் இணைக்கும் முக்கிய பாதையாக உள்ள இந்தப் பாலம், அரசால் முறையாக பராமரிக்கப்படாததால் இந்த விபத்து நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

தாஜ் சமுத்திராவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரி! எச்சரிக்கையை புறக்கணித்த தேசியப் புலனாய்வு IBC Tamil
