மீண்டும் பரவத் தொடங்கிய நிபா வைரஸ் - 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
நிபா வைரஸ் கண்டறியப்பட்டதால் 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிபா வைரஸ்
கேரளா, மலப்புரத்தில் பெண் ஒருவருக்கு நிபா வைரஸ் அறிகுறிகளுடன் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனையில் அவருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது. அதேபோல், நிபா வைரஸ் தொற்றுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் மூளைச்சாவு அடைந்தார்.
அரசு எச்சரிக்கை
இதன் காரணமாக அவ்விரு மாவட்டங்கள் மற்றும் கோழிக்கோடு மாவட்டத்திற்கும் கேரள சுகாதாரத்துறை நிபா வைரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தொற்று உறுதியான இருவருடனும் தொடர்பில் இருந்த நபர்களை கண்டறியும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இது குறித்து அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் செய்தியாளர்கள் சந்திப்பில், “நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிய காவல்துறையின் உதவி கோரப்பட்டுள்ளது. மாநில மற்றும் மாவட்ட அளவில் உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
வைரஸ் பரவுவதைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை கோழிக்கோடு, பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்வார்கள். கடந்த ஒரு வாரத்தில் ஏற்பட்ட இயற்கைக்கு மாறான அனைத்து மரணங்களும் கண்காணிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.