அனைத்து பயணிகளுக்கும் இலவச உணவு - இந்த ஒரு ரயிலில் மட்டும் தான்..

Indian Railways Punjab
By Sumathi Jul 02, 2025 02:00 PM GMT
Report

இந்த 1 ரயிலில் மட்டும் அனைத்து பயணிகளுக்கும் இலவச உணவு வழங்கப்படுகிறது.

லாங்கர் ஆன் வீல்ஸ்

சச்கந்த் எக்ஸ்பிரஸ் என்பது அமிர்தசரஸ் மற்றும் நாந்தேத் இடையே இயக்கப்படும் ஒரு ரயில். இந்த ரயில் "லாங்கர் ஆன் வீல்ஸ்" என்று அழைக்கப்படுகிறது.

அனைத்து பயணிகளுக்கும் இலவச உணவு - இந்த ஒரு ரயிலில் மட்டும் தான்.. | India Sachkhand Express Give Free Food Passengers

இந்த ரயில் பஞ்சாப் அமிர்தசரஸிலிருந்து நாந்தேட்டிற்கு மொத்தம் 2081 கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது. 33 மணி நேரம் பயணிக்கிறது, மேலும் 39 ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

ரயில் தாமதமானால் டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம் - எப்படி தெரியுமா?

ரயில் தாமதமானால் டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம் - எப்படி தெரியுமா?

உணவு இலவசம்

சீக்கியர்களின் புனித தலங்களான ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் (பொற்கோவில்) அமிர்தசரஸ் மற்றும் ஸ்ரீ ஹசூர் சாஹிப் நாந்தேட் ஆகியவற்றை இணைக்கிறது.

sachkhand express

இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்குக் காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளையும் உணவு கடந்த 29 ஆண்டுகளாக இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உணவு திட்டத்தில் ஏற்படும் செலவுகள் குருத்துவாராக்களால் பெறப்படும் நன்கொடைகள் மூலம் ஏற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.