ஒரு மணி நேரத்தில் திருப்பதி கோவிலுக்கு கிடைத்த ரூ.19.35 கோடி - எப்படி தெரியுமா?

Andhra Pradesh
By Sumathi Apr 26, 2023 04:55 AM GMT
Report

ஒரே மணி நேரத்தில் 19 கோடியே 35 லட்ச ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

திருப்பதி கோவில்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். அதிலும் தற்போது கோடைக்கால விடுமுறை என்பதால் மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

ஒரு மணி நேரத்தில் திருப்பதி கோவிலுக்கு கிடைத்த ரூ.19.35 கோடி - எப்படி தெரியுமா? | Tirupati Received Rs 19 35 Crore Within One Hour

அதன் அடிப்படையில், பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வி ஐ பி தரிசனம், 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசனம், இலவச தரிசனம் என பல்வேறு வகையான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது. இதில் ஒவ்வொரு மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள்

டிக்கெட் விற்பனை

தேவஸ்தானத்தின் இணையதளத்தில் முந்தைய மாதமே வெளியிடப்படும். இதனை ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். அந்த வகையில் காலை 10 மணிக்கு மே, ஜூன் மாதங்களில் வழிபட தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தான நிர்வாகம் ஆன்லைனில் வெளியிட்டது.

இந்நிலையில், ஒரே மணி நேரத்தில் மொத்த டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்து முடித்தனர். இதனால் தேவஸ்தானத்திற்கு ஒரே மணி நேரத்தில் 19 கோடியே 35 லட்ச ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. விற்று தீர்ந்த மொத்த டிக்கெட்களின் எண்ணிக்கை 6,45,000 என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.