பெருமாளை கருட வாகனத்தில் தரிசித்தவர்களுக்கு.. இது கண்டிப்பா நடக்கும்!
திருப்பதி ஏழுமலையான் கோயில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கருட வாகன புறப்பாடு வெகு விமரிசையாக நடைபெற்றது.
கருட சேவை :
கருட சேவை அல்லது கருட வாகன புறப்பாடு என்பது வைணவத் தலங்களில் திருமால் கருட வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்வாகும். வைணவக் கோயில்களின் பிரம்மோற்சவ விழாவின் 5 ஆம் நாளில் இந்நிகழ்வு நடைபெறும். அப்போது கருடாழ்வார் திருமாலின் இரண்டு திருவடிகளையும் தனது இரு கரங்களில் தாங்கி வீதியுலா வருவார்.
திருப்பதி:
அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருட வாகன புறப்பாடு நடைபெறும்.
அதன்படி பௌர்ணமி தினமான நேற்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இரவு 7 மணி முதல் 9 மணி வரை தங்க மற்றும் வைர ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி 4 மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.
கருட சேவை சிறப்பு :
இதனை காண ஏழுமலையான் கோயிலை சுற்றிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.
மேலும் கருட சேவையில் எழுந்தருளும் பகவானை தரிசித்தால் சகல பயங்களும் நீங்கும் என்பது ஐதிகம். பெருமாளை கருட வாகனத்தில் தரிசித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது நம்பிக்கை.