இனி திருப்பதியில் மசால் வடை பிரசாதம்; அப்போ லட்டு? தேவஸ்தானம் அறிவிப்பு!
திருப்பதி அன்னதானத்தில் மசால் வடை வழங்கவுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
அன்னதானம்
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க உலகளவில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. இங்கு பக்தர்களுக்கு இலவசமாக அன்னபிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. வழக்கமான மெனுவில் சாம்பார், ரசம், மோர், பொரியல் போன்றவை இடம்பெற்றிருக்கும்.
இரவு உணவின் போது உப்புமா, சப்பாத்தி, கற்கண்டு சாதம் போன்றவைகளும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஜனவரி 20ம் தேதியான நேற்று முதல் திருப்பதி அன்ன பிரசாதத்தில் மசால் வடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மசால் வடை
முதல் கட்டமாக மாத்ருஸ்ரீ திரிகொண்டா வெங்கமாம்பா அன்ன பிரசாத கேந்திரத்தில் பக்தர்களுக்கு மசால் வடை வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் 5000 வடைகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த மசால் வடை அனைத்து பக்தர்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. இனி வரும் காலங்களில் திருப்பதி லட்டுடன், திருப்பதி வடையும் பிரபலமாகி விடும் என கூறப்படுகிறது.