திருப்பதி லட்டு விற்பனையில் அதிரடி மாற்றம் - தேவஸ்தானம் முடிவு!
திருப்பதி லட்டு விற்பனையில் தேவஸ்தானம் முக்கிய முடிவை எடுத்துள்ளது.
திருப்பதி லட்டு
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க உலகளவில் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
இங்கு நடைபாதையில் செல்லும் திவ்ய தரிசனம், இலவச தரிசனம், ரூ 300 சிறப்பு தரிசனம் உள்ளிட்டவை நடைமுறையில் உள்ளது. இதில் தரிசனம் செய்தால் 2 லட்டுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. கூடுதல் லட்டு வேண்டும் என்றால் லட்டு கவுன்டர்களில் ரூ 50 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
தேவஸ்தானம் முடிவு
இந்நிலையில், கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு லட்டு விற்கப்படுவது திருமலை திருப்பதி தேவஸ்தானம் கவனத்துக்கு தெரியவந்துள்ளது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தான் சாமி தரிசனம் செய்யாதவர்கள் லட்டு வாங்கவேண்டுமானால், அவர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம்.
ஒரு ஆதார் அட்டையில் இரண்டு லட்டுகளை மட்டுமே வழங்கப்படும் என்ற முறை கொண்டு வரப்பட்டுள்ளது. TTD, சமீபத்திய முடிவால் ஒரு வாரத்திற்குள் ஒரு லட்சத்துக்கும் அதிகமான லட்டுகளை சப்ளை செய்துள்ளது.
சென்னையில் உள்ள ஸ்ரீவாரி கோயில்கள் மற்றும் பெங்களூரு மற்றும் வேலூரில் உள்ள தகவல் மையங்களில் லட்டுகளை வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.