ஒரு நாள் அன்னதானத்திற்கு இவ்வளவு நன்கொடையா? திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

Andhra Pradesh Tirumala
By Sumathi Mar 01, 2025 03:50 AM GMT
Report

அன்னதானம் வழங்க விரும்புவோர் அளிக்கவேண்டிய தொகை குறித்த தகவலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அன்னதானம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். தினமும் பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம் செய்கின்றனர்.

tirupati

இவர்களுக்கு திருமலையில் மாத்ரு ஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பாள் கூடத்தில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மற்றும் அரசு வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள பணத்தில் இருந்து கிடைக்கும் வட்டியில் இருந்து இந்த அன்னதானம் வழங்கப்படுகிறது.

இந்தியாவின் டாப் வரிசையில் இனி திருப்பதியும் ஒன்று.. ஏன் தெரியுமா?காத்திருக்கும் குட் நியூஸ் !

இந்தியாவின் டாப் வரிசையில் இனி திருப்பதியும் ஒன்று.. ஏன் தெரியுமா?காத்திருக்கும் குட் நியூஸ் !

தேவஸ்தான அறிவிப்பு

இதுதவிர திருமலையில் உள்ள வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ், பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், கோவிந்தராஜர் கோயில், விஷ்ணு நிவாசம், மாதவம் விடுதிகள் என பல இடங்களில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

tirupati annadanam

இந்நிலையில் ஒருநாள் அன்ன பிரசாதம் வழங்க விரும்புவோர் ரூ.44 லட்சம் நன்கொடை செலுத்த வேண்டும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

காலை சிற்றுண்டிக்கு மட்டும் ரூ.10 லட்சம், மதிய உணவு அல்லது இரவு உணவுக்கு ரூ.17 லட்சம் எனவும் நன்கொடை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 1 லட்சம் பக்தர்கள் பலனடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.