சுற்றுலா பயணிகள் வரத்து குறைவு; இட்லி, சாம்பார்தான் காரணம் - எம்எல்ஏ வினோத பதில்!
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு வினோத காரணம் ஒன்றை பாஜக எம்எல்ஏ கூறியுள்ளார்.
சுற்றுலா
சுற்றுலாவுக்கு பெயர் போன இடமென்றால் அதில் நிச்சயம் கோவா இடம்பெறும். ஆனால், தற்போது அங்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசியுள்ள பாஜக எம்எல்ஏ மைக்கேல் லோபோ, கோவாவில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக குறைந்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறைவுக்கு அரசை மட்டும் குறை சொல்ல முடியாது.
வித்தியாசமான விளக்கம்
ரஷ்யா-உக்ரைன் போராலும், கடற்கரை ரெசார்ட்களில் இட்லி, சாம்பார், வடபாவ் போன்ற உணவுகளாலும் கோவாவுக்கு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடற்கரை ரெசார்ட்களில் உள்ள குடில்களை வணிகர்கள் வாடகைக்கு விடும் நிலையில், அங்கு கர்நாடகத்தைச் சேர்ந்த பலர் இட்லி சாம்பார் விற்கின்றனர்.
சுற்றுலாத்துறையினரும் பலதரப்பினரும் இணைந்து சுற்றுலா வணிகத்தை மேம்படுத்த அமர்ந்து பேசவேண்டும். சுற்றுலா பயணிகளின் வணிகம் குறைந்ததை தீவிரமாக எடுத்துக்கொள்ளாவிட்டால் வரும் நாட்களில் கோவாவில் சுற்றுலா வணிகம் கடுமையாக பாதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.