திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய மொபைல் செயலி - இவ்வளவு வசதியா..!
திருப்பதி தேவஸ்தானம் புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
மொபைல் செயலி
திருமலை திருப்பதி தேவஸ் தானம் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து 'TTDevasthanams' என்கிற புதிய மொபைல் செயலியை உருவாக்கி உள்ளது. இதன் மூலம் பக்தர்கள் தரிசனம் தங்கும் அறைகள், ஆர்ஜித சேவை முன்பதிவு ,திருமலை நிலவரம்,

பண்டிகை விசேஷ நாட்கள் குறித்து விவரங்கள் , குலுக்கள் முறை தரிசனம், முன்பதிவு என அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம். இதுக்குறித்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி பேசும் போது,
வசதி
இது ஒரு யூனிவர்ஸல் செயலி. ஏழுமலையான் பக்தர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட ஒன்று. இந்த செயலி மூலம் இ-உண்டி, வெங்கடேஸ்வரா பக்தி சேனல் ஒளிபரப்பு என இது ஒரு வழி காட்டி போல் செயல்படும்.
மொத்தத்தில் தகவல்களுடன் கூடிய ஒரு ஆன்மீக மொபைல் செயலி வெளிவருவது இதுதான் முதன் முறை என்றார்.