திருப்பதி பிரம்மோற்சவம் கோலாகலம் - கோவிந்தா...கோவிந்தா விண்ணை எட்டிய முழக்கம்
திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு லட்ச கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
பிரம்மோற்சவம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. இதன் நிறைவு நாளான இன்று காலை கோவில் திருக்குளம் ஆன சுவாமி புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது.

சக்கரத்தாழ்வாரை கோவில் திருக்குளத்துக்குள் எடுத்து சென்ற தேவஸ்தான அர்ச்சகர்கள் மூன்று முறை நீரில் மூழ்க செய்து சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடத்தினர். அப்போது திருக்குளத்தின் நான்கு புறங்களிலும் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்குளத்தில் மூழ்கி புனித நீராடினர்.
நிறைவு
அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என விண்ணதிர பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர். தீர்த்தவாரி முடிந்தவுடன் ஏராளமான பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடினர்.

கடந்த 8 நாட்களாக கோலாகலமாக நடைபெற்ற பிரம்மோற்சவ விழா மாலை கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்றது. கருட சேவை நாளன்று மட்டும் பல பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.
இதில் கடந்த 9 நாட்களில் மட்டும் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 8 நாட்களில் 5 லட்சத்து 68,735 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். எட்டு நாட்களில் உண்டியலில் 20 கோடியே 43 லட்சத்து 9400 பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர்.