ஏப்ரல் மாதத்தில் மட்டுமே இவ்வளவு கோடியா? திருப்பதியில் கொட்டிய துட்டு!
உலகின் பணக்கார கடவுள்களில் ஒருவர் திருப்பதி ஏழுமலையான்.
திருப்பதி
ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள இந்த மலை கோவிலானது உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்களை ஈர்த்து வருகின்றது. கோவில் பிரபலமடைத்ததில் இருந்து தற்போது வரை எப்போது பார்த்தாலும் கோவிலில் கூட்டம் தான்.
பக்தர்கள் மொழி வேறுபாடின்றி வந்து திருப்பதி ஏழுமலையானை தரிசித்து செல்கிறார்கள். அதுவும் சில சிறப்பு நாட்கள் என்றால் கூட்டத்தை அடக்கவே முடியாது. திருப்பத்தில் போய் மொட்டையே தேடினேன் என்ற பழமொழி உருவான அளவிற்கு கூட்டம் குமியுகிறது.
காணிக்கை
வருபவர்கள் பலரும் பல விதமான காணிக்கைகளை செலுத்தி விட்டே திரும்புகிறார்கள். அதில் பணம், தங்கம் என்பதே அதிகம். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் கோவிலில் கிடைத்த காணிக்கைகளை எண்ணுவார்கள்.
அப்படி, இந்த வருடம் ஏப்ரல் மாதத்தின் காணிக்கையையே எண்ணி, கிடைத்த தொகையை திருப்பதி கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன் படி, கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே ரூ. 101 கோடியே 63 லட்சம் காணிக்கையாக கிடைத்துள்ளது.
மொத்தமாக தரிசித்து சென்றவர்கள் 20.17 லட்சம் பக்தர்கள். அதேபோல் ஒரு மாதத்தில், 94.22 லட்சம் லட்டுக்கள் பிரசாதமாக வழங்கப்பட்டுள்ளது.