இந்தியாவின் டாப் வரிசையில் இனி திருப்பதியும் ஒன்று.. ஏன் தெரியுமா?காத்திருக்கும் குட் நியூஸ் !
சர்வதேச தரத்திற்கு உயர்ந்த திருப்பதி விமான நிலையம் குறித்துத் தெரிந்துகொள்ளலாம்.
திருப்பதி
தென்னிந்தியாவின் முக்கிய விமான நிலையங்களில் திருப்பதி ரேணிகுண்டா விமான நிலையம் ஒன்றாகும்.ஏழுமலையான் கோவிலுக்கு ஏராளமான வெளியூர் பக்தர்கள் விமானங்கள் மூலம் வந்து செல்கின்றன.
அதுமட்டுமின்றி டெல்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களிலிருந்தும் திருப்பதிக்கு நேரடி விமானச் சேவை உள்ளது.திருப்பதி விமான நிலையத்தில் தற்போது 2,285 மீட்டர் நீளமுள்ள ஓடுபாதை இருந்து வந்தது.
இந்த நிலையில், சமீபத்தில் சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தப்பட்டு ஓடுபாதை 3,810 மீட்டாராக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஓடுபாதை போயிங் 777 மற்றும் ஏர்பஸ் 330 போன்ற அகலமான விமானங்களைத் தரையிறக்கும் வசதிகளைக் கொண்டுள்ளது.
விமான நிலையம்
மேலும் DVOR,DME போன்ற நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் விமானப் போக்குவரத்தைக் கையாளும் திறன் ஒரு நாளைக்கு 100 விமானங்களிலிருந்து 200 விமானங்களாக அதிகரிக்கும்.
AAI-இயக்கும் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் மிக நீளமான ஓடுபாதை கொண்ட விமான நிலையம் என்ற பெருமையைத் திருப்பதி ரேணிகுண்டா விமான நிலையம் பெற்றுள்ளது.இதனால் ஆந்திராவில் சுற்றுலா, தொழில் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.