ரயிலில் இந்த டிக்கெட்டில் அடிக்கடி பயணிப்பவரா நீங்கள்?ரூல்ஸ் மாற்றம் - இதோ விவரம்!
Indian Railways
Train Crowd
Railways
By Vidhya Senthil
பொது டிக்கெட்களின் விதிகளில் மாற்றம் செய்யப்பட்ட உள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
பொது டிக்கெட்
உத்தரபிரசேத மாநிலத்தில் நடைபெற்று வரும் வாரம் கும்பமேளாவிற்குச் செல்வதற்காக மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.இதனால் கடந்த வாரம் டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
இதன் எதிரொலியாக பொது டிக்கெட்களின் விதிகளில் மாற்றம் செய்யப்பட்ட உள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் பொது டிக்கெட்டுடன் எந்த ரயிலிலும் ஏறலாம் என்ற விதி இருந்து வந்தது.
மாற்றம்
- ஆனால் விரைவில் கொண்டுவரப்படும் புதிய மாற்றத்தில் ரயிலின் பெயர் டிக்கெட்டில் குறிப்பிடப்படும்.
- இதன்மூலம் பயணிகள் அவரவர் ரயிலுக்கு மட்டும் செல்லும் வகையில் திருத்தம் செய்யப்பட உள்ளது.
- பொது டிக்கெட் வாங்கிய நேரத்திலிருந்து சரியாக 3 மணிநேரம் மட்டுமே செல்லுபடியாகும். இந்த காலக்கெடுவிற்குள் பயணம் தொடங்கப்படாவிட்டால், டிக்கெட் செல்லாது.
- குறிப்பாக ஒரு பயணி தனக்கு ஒதுக்கப்பட்ட ரயிலைத் தவறவிட்டால், அவர்கள் புதிய டிக்கெட்டை வாங்க வேண்டியிருக்கும்.
இந்த வசதி மூலம் குறிப்பிட்ட ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தடுக்க முடியும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.