சந்திரகிரகணம்: திருப்பதி, தமிழக கோவில்கள் நடை மூடல்!

Tamil nadu Madurai India
By Sumathi Nov 08, 2022 06:04 AM GMT
Report

சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி மற்றும் தமிழக கோயில்களில் நடை சாத்தப்படுகிறது.

சந்திரகிரகணம்

திருப்பதியில், இன்று காலை 8.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை 11 மணி நேரம் நடை சாத்தப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அன்னதானம் வழங்குவதும் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரகிரகணம்: திருப்பதி, தமிழக கோவில்கள் நடை மூடல்! | Tirupathi Tn Temple To Closed Amid Lunar Eclipse

இதேபோல், தமிழகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும், அதன் 22 உப கோவில்களும் காலை 9.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடை சாத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருச்சியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் நாளை காலை 6:45 மணி முதல் காலை 8 மணி வரையிலும்,

கோவில்கள் நடை மூடல்

காலை 9 மணி முதல் மதியம் 12:30 மணி வரையிலும் இரவு 8 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட இருக்கின்றார்கள். ராமேஸ்வரம் கோயிலிலும் நண்பர்கள் ஒரு மணி முதல் இரவு 7 மணி வரை கோவில் நடை சாத்தப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருச்செந்தூரில், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் மதியம் 1.30 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது. இரவு 7 மணிக்கு நடை திறக்கப்பட்டு மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடக்கிறது.