மருத்துவமனையில் திருமணம் செய்த ஜோடி - விபரீதத்தால் இந்த முடிவு
மருத்துவமனையில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருமணம்
தெலங்கானா, புபால்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்தவர் திருப்பதி. இவருக்கும் சென்னூர் கிராமத்தைச் சேர்ந்த ஷைலஜா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில், திருமணத்திற்கு முதல் நாள் அன்று மணப்பெண் ஷைலஜாவுக்கு விபத்து நிகழ்ந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனால் அவரை குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
நெகிழ்ச்சி சம்பவம்
இதனால் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்குள்ளாக மாப்பிள்ளை திருப்பதி வீட்டிற்கு தகவல் சென்ற நிலையில், இரு வீட்டாரும் கலந்து ஆலோசித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் வைத்தே திருமணம் செய்து கொள்ள அனுமதி தேவை என கோரிக்கை வைக்க மருத்துவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி, மருத்துவமனையில் வைத்தே மணப்பெண்ணும் மணமகனும் மாலை மாற்றி, தாலி கட்டி திருமணம் செய்துள்ளனர்.