தாலி கட்டி.. அதுக்குள்ளயா - மாப்பிள்ளையை பிரிய அடம்பிடித்த மணப்பெண்!

Tamil nadu Marriage Divorce
By Sumathi Sep 04, 2022 07:11 AM GMT
Report

திருமணமான சில நிமிடங்களிலேயே மணமகனை வேண்டாம் என மணப்பெண் மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம்

திருப்பூர், பிஎன் ரோடு பகுதியில் 32 வயதான இளைஞர் ஒருவருக்கும் 25 வயதான பெண் ஒருவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் ஏற்பாடு செய்தனர். திருமணத்திற்காக சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்தே ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

தாலி கட்டி.. அதுக்குள்ளயா - மாப்பிள்ளையை பிரிய அடம்பிடித்த மணப்பெண்! | A Bride Who Does Not Want A Groom Tirupur

இந்நிலையில், திருமணத்திற்கான ஏற்பாடுகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில், வழக்கமான சம்பிரதாயங்களின் படி கோவிலில் பூஜைகள் செய்யப்பட்ட பின் மணமக்கள் இருவரும் மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.

 லேசாக வளைந்த கால்

பின்னர் திருப்பூர் பூலுவா பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது மணப்பெண் மணமகனின் காலை பார்த்துள்ளார். இரண்டு கால்களில் ஒருகால் லேசாக வளைந்து இருப்பதைக் கண்ட அவர் இதுகுறித்து மணமகனிடம் கேட்டுள்ளார்.

அப்போது ஒரு விபத்தில் அடிபட்டதன் காரணமாக அறுவை சிகிச்சை செய்ததால் கால் அப்படி இருப்பதாக கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகள் தன்னை ஏமாற்றி விட்டீர்கள் எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை எனக் கூறியுள்ளார்.

பிரிந்த தம்பதி

தொடர்ந்து இந்த சம்பவம் கொங்கு நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றது. மணமகள், மணமகன் மற்றும் இரு தரப்பு உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். காலில் அறுவை சிகிச்சை செய்ததை மறைத்து திருமணம் செய்ததாக மனமகளும் அவருடைய பெற்றோரும் குற்றம் சாட்டினர்.

மேலும் மணமகன் வேலைக்குச் செல்ல மாட்டார் என்பதால் தனக்கு திருமணம் வேண்டாம் என மணமகள் கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் பிரிந்து கொள்வதாக ஒப்புக்கொண்டனர்.