இந்தியாவிலே தூய்மையான காற்று இந்த மாவட்டத்தில்தான் - தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெருமை

Delhi India Thanjavur Tirunelveli
By Karthikraja Jan 16, 2025 12:04 PM GMT
Report

தூய்மையான மற்றும் மாசுவான காற்று உள்ள நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

காற்று மாசு

அதிகரித்து வரும் தொழிற்சாலைகள், வாகன பயன்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் காற்றின் தரம் நாளுக்குநாள் குறைந்து வருகிறது. 

aqi level high in delhi

கடந்த சில ஆண்டுகளாக டெல்லி போன்ற நகரங்களில் காற்று மாசுபாடு வெகுவாக அதிகரித்துள்ளது. காற்று மாசுபாட்டை கட்டுபடுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. 

இந்தியாவில் தூய காற்றை விற்கும் ஹோட்டல்கள் - வைரலாகும் பதிவு

இந்தியாவில் தூய காற்றை விற்கும் ஹோட்டல்கள் - வைரலாகும் பதிவு

திருநெல்வேலி

இந்நிலையில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 9 ஜனவரி 2025 அன்று, தூய்மையான காற்று உள்ள நகரங்கள் மற்றும் மாசடைந்த காற்றுள்ள நகரங்களின் பட்டியலை வெளியிட்டது. 

திருநெல்வேலி காற்று

இதில் இந்தியாவிலே தூய்மையான காற்று உள்ள நகரங்களின் பட்டியலில் திருநெல்வேலி முதலிடத்தில் உள்ளது. திருநெல்வேலியின் AQI அளவு 33 ஆகும். இதில் 55 AQI அளவுடன் தஞ்சாவூர் 5வது இடத்தில் உள்ளது. முதல் 10 இடங்களில் 8 தென் இந்திய நகரங்கள் இடம்பிடித்துள்ளது.  

air quality index aqi levels

டெல்லி அதிகளவு காற்று மாசடைந்த பட்டியலில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. டெல்லியின் AQI அளவு 357 ஆகும். இந்த பட்டியலில் ஒரு தென்னிந்திய நகரம் கூட இடம்பெறவில்லை. AQI(Air Quality Index) என்பது காற்றின் தரம் குறித்து மதிப்பிட அரசு நிறுவனங்கள் பயன்படுத்தும் அளவிடும் முறையாகும். காற்று மாசு அதிகரிக்கும் போது AQI அளவு அதிகமாக இருக்கும்.