இந்தியாவில் தூய காற்றை விற்கும் ஹோட்டல்கள் - வைரலாகும் பதிவு
தூய காற்றை ஹோட்டல்கள் சேவையாக விற்பனை செய்யும் பதிவு வைரலாகி வருகிறது.
காற்று மாசுபாடு
அதிகரிக்கும் வாகன பயன்பாடு மற்றும் தொழிற்சாலைகளின் வளர்ச்சி காரணமாக காற்று மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் டெல்லியில், காற்று தரக்குறியீடு வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்து மக்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டனர்.
இதனையடுத்து, பள்ளிகளை தற்காலிமாக மூடிவிட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த அரசு அறிவுறுத்தியது. மேலும், பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது.
தூய்மையான காற்று
இந்நிலையில் , டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தூய்மையான காற்று விற்கப்படுவதாக சமூக வலைத்தளத்தில் விவாதம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க தொழிலதிபரான பிரையன் ஜான்சன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Hotel selling clean air as a service pic.twitter.com/YUwn3PrNsh
— Bryan Johnson /dd (@bryan_johnson) December 5, 2024
அந்த பதிவில் டெல்லி ஓபராய் ஹோட்டலில் ஒரு அறிவிப்பு பலகை ஒன்றை காட்டி, அதில் நியூயார்க், லண்டன் போன்ற மற்ற நகரங்களில் உள்ள காற்றின் தரக்குறியீடு அளவும், ஹோட்டல் அறையில் உள்ள காற்றின் தரக்குறியீடு அளவும் காட்டப்பட்டுள்ளது.
காற்று தரக்குறியீடு
மேலும், அமெரிக்காவில் முதலீட்டாளராக உள்ள டெபர்கியா தாஸ் என்பவர், டெல்லி தாஜ் ஹொட்டலில் உள்ள அறிவிப்பை காட்டினார். அதில், ஹோட்டலுக்கு வெளியே காற்று தரக்குறியீடு 397 ஆக இருந்தது. விருந்தினர் அறையில், காற்று தரக்குறியீடு 58 ஆக இருந்தது" என தெரிவித்துள்ளார்.
இவர்களின் பதிவு வைரல் ஆகி வரும் நிலையில், டெல்லியில் சுத்தமான காற்று ப்ரீமியமான சேவையாக மாறியுள்ளது. சுத்தமான காற்றை பெற உலக நாடுகளில் அறையை விட்டு வெளியே செல்வோம். இந்தியாவில் மட்டும் தூய்மையான காற்றை பெற அறைக்கு உள்ளே செல்ல வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.