பெண் அழைப்பு முதல் முதலிரவு வரை.. Time போட்டு திருமண பேனர் வைத்த நண்பர்கள்!

Tamil nadu Marriage Viral Photos
By Sumathi Dec 19, 2022 10:35 AM GMT
Report

திருமண பேனர் ஒன்று மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.

திருமண பேனர்

நெல்லை மாவட்டம் பள்ளமடை கிராமத்தில் காளி ராஜா மற்றும் பிரியா ஆகிய இருவருக்கு திருமணம் நடைபெற்றது. அதில், மாப்பிள்ளை காளி ராஜாவின் நண்பர்கள் 'மது ஒழிப்போர் சங்கம்' மற்றும் 'வெட்டி விஐபி சங்கம்' என்ற பெயரில் விளம்பர பேனர் ஒன்றை வைத்துள்ளனர்.

பெண் அழைப்பு முதல் முதலிரவு வரை.. Time போட்டு திருமண பேனர் வைத்த நண்பர்கள்! | Tirunelveli Marriage Banner By Youth Goes Viral

மேலும், 'குடி குடியை கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்' என்ற வாசகத்தின் கீழ் மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்ற வசனத்தை பதிவிட்டு மணமக்கள் பெயரை பதிவிட்டுள்ளனர்.

வைரல்

இதில் பேசு பொருளான விஷயம் என்னவென்றால், மாலை 6:00 மணிக்கு மாப்பிள்ளை தோழர்களில் அலப்பறை, 7:30 மணி முதல் 9:30 மணி வரை சட்டி சோறு, இரவு 10:30 மணிக்கு முதலிரவு, இரவு 11:30 மணிக்கு மின் கம்பியை அணில் துண்டித்தல்

12 மணிக்கு வான வேடிக்கை என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திருமண பேனர் தற்போது வைரலாகி வருகிறது.