நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் - திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
திருநெல்வேலி மாவட்டத்திற்கு இன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லையப்பர் தேரோட்டம்
திருநெல்வேலியில் மிகவும் பிரசித்திபெற்ற கோவிலான நெல்லையப்பர் கோயிலில் கடந்த 13-ந்தேதி முதல் ஆனிப் பெருவிழா நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான இன்று(21.06.2024) தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில் நெல்லையப்பர் தேர் தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய தேர் என்னும் பெருமையைக் கொண்டதாகும். சுமார் 70 அடி உயரம், 450 டன் எடையுடன் இந்தத் தேர் மிகவும் கம்பீரமாக காணப்படும்.
தேரோட்டம் காலை 6;30 க்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வடம் பிடித்தி இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். தேரோட்டத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நெல்லை டவுன் ரத வீதிகளில் திரண்டுள்ளனர்.
விடுமுறை
தேரோட்டத்தையொட்டி பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும் பக்தர்களின் வசதிக்காக அங்காங்கே தற்காலிக குடிநீர் தொட்டி, கழிப்பறை வாகனம் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வாகனம் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கபட்டுள்ளது. ஆனால் வங்கிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 29.06.2024 அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.