நெல்லைக்கு பெயர்போன ஆச்சி சமையல் - ருசிக்க சிறந்த இடங்கள் எதெல்லாம் தெரியுமா?
திருநெல்வேலியும், அதனை சுற்றியுள்ள கிராமங்களும் திருவிழாவை உணரவும், கலாச்சாரத்தைப் பார்க்கவும், சிறந்த உணவை ருசிக்கவும் பெயர்போனது.
ஆச்சி சமையல்
நெல்லையைச் சேர்ந்தவர்கள் வெளியூர்களுக்கு வேலைக்குச் சென்றால் அவர்கள் மிஸ் செய்வது 2 விஷயம் தான். ஒன்று பராம்பரியம் மாறாத உணவு. இன்னொன்று தாமிரபரணி தண்ணீர். அந்த அளவுக்கு அங்குள்ள உணவு வகைகள் கட்டிப்போட்டுள்ளது என்றால் மிகையாகா...
பெரும்பாலும் இங்கு தயாரிக்கப்படும் உணவுகள் தேங்காயில் திளைத்துப்போனது. அதற்கென்றே தனி நறுமனமும், ருசியும் உண்டு. திருநெல்வேலினு சொன்ன உடனே எல்லாருக்கும் ஞாபகம் வருவது அல்வா. ஆனால், அது மட்டும் இல்ல.. இங்க சொதி குழம்பு சாப்பாடு, கூட்டாஞ்சோறு, உளுந்தம்பருப்பு சோறு இன்னும் நிறைய மண் மணம் மாறாத உணவு வகைகள் இருக்கு.
இருட்டுக் கடை அல்வா
இங்கு ஆச்சிகள் வகுத்த சமையல் குறிப்புகள் இன்று வரை பின்பற்றப்படுகின்றன. இப்படியான உணவுகள் கிடைக்கக்கூடிய இடங்கள் குறித்துப் பார்க்கலாம். இனிப்பு வகைகளுக்கான சிறந்த இடமாக நெல்லை, ஜங்ஷன் அமைந்துள்ளது. குறிப்பாக சாந்தி ஸ்வீட்ஸ், லட்சுமி விலாஸ், தங்கையா ஸ்வீட்ஸ், ஆர்யாஸ், அரசன் என்று கூறலாம். இங்கெல்லாம் நெய் மனம் மாறாத அனைத்து இனிப்பு வகைகளும் (ஜாங்கிரி, மைசூர் பார்க், பாதுஷா, பால்கோவா...) கிடைக்கும்.
இருட்டுக் கடை அல்வா டவுன் பகுதியில், நெல்லையப்பர் கோவிலுக்கு எதிராக அமைந்துள்ளது. மாலை வேளைகளில், அந்த அல்வாவை சிறிய வாழை இலை துண்டில் வாங்கி சாப்பிட ரதவீதியில் நீண்ட க்யூவே நிற்கும். வெளியூர் செல்பவர்கள் கிலோ கணக்கிலும் வாங்கிச் செல்வார்கள்.
அடுத்து சைவ உணவுகளுக்கான சிறந்த இடத்தைப் பார்ப்போம்.
சைவ உணவுகள்
ஸ்ரீமதுரம்
தூத்துக்குடி நெடுஞ்சாலைக்கு எதிரே, KTC நகரில் அமைந்துள்ளது. மலிவு விலையில் தனித்துவமான மற்றும் சிறந்த உணவு வகைகள் கிடைக்கும். ரவா தோசை, ரசம் தோசை மற்றும் நெய் மசால் வறுவல், ஊத்தப்பம் போன்றவை அருமையாக இருக்கும். காலை உணவு வகைகள் ரூ.18லிருந்தே விற்பனை செய்யப்படுகிறது.
நெல்லை சரவண பவா
டவுன் மற்றும் பாளையங்கோட்டை பகுதியில் அமைந்துள்ளது. சிறந்த பொருட்கள் தரத்தில் சமரசம் செய்யாமல் சுவையான உணவுகளை வழங்குவது கைத்தேர்ந்த இடம். தஹி பூரி, பாவ் பாஜி, சென்னா சாட், பானி பூரி, பானி பூரி கரம், மசாலா பூரி, சூப்: மிளகு தானி, வெஜிடபிள் க்ளியர், கலப்பு காய்கறி, காளான் மற்றும் ஸ்வீட் கார்ன் வெஜ் சூப், சீன ஸ்டார்டர்கள்: காளான் பெப்பர் ஃப்ரை, சில்லி கோபி ட்ரை, மிளகாய் காளான் ட்ரை, சில்லி பனீர் ட்ரை, தேன் சில்லி கோபிடோ & தேன் போன்ற மாலை நேர சிற்றுண்டிகளுக்கு சிறப்பு வாய்ந்தது.
அன்னபூர்ணா
மாவட்ட நீதிமன்றம் எதிரில் பாளையங்கோட்டை பகுதியில் அமைந்துள்ளது. இது ஒரு பிரபலமான சைவ உணவகம். தக்காளி சாதம், பிரியாணி, நூடுல்ஸ், பனீர் மட்டர் மசாலா மற்றும் கோபி மசாலா போன்ற சுவையான தனித்துவமான உணவு வகைகளை வழங்குகின்றனர். மேலும், சுவையான இனிப்புகள், ஹல்வா மற்றும் பால் இனிப்புகளும் கிடைக்கும். சைவ விரும்பிகள் தரமான மீல்ஸ் சாப்பிட ஏற்ற இடம்.
ஹோட்டல் ஜானகிராம், ஆனந்தா, பரணி போன்ற ஜங்ஷனில் அமைந்துள்ள உணவனங்களும் சைவத்திற்கு ஏற்றது. இதில் பரணியில் மல்டி க்யூசின் உணவுகளான, வட இந்திய உணவு வகைகள், சீன வகைகள் போன்றவை கிடைக்கும்.
அசைவ உணவுகள்
அசைவ உணவுகளுக்கும் சளைச்சதல்ல நெல்லை. காரசாரமான மசாலாக்களுக்கும், ருசிக்கும் தனிப்பெயர் உண்டு. அந்த வகையில் டவுன் மற்றும் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள வைர மாளிகை. நல்லி எழும்பு ரசத்தில் தொடங்கி அனைத்து வகை அசைவ உணவுகளும் கிடைக்கும்.
MH குடும்ப மல்டிகுசைன், சந்திப்பு பகுதியில் உள்ளது. ஸ்பிரிங் ரோல்ஸ், பீஸ்ஸாக்கள், சாண்ட்விச்கள் போன்ற உணவுகள் தனித்தன்மையுடன் கிடைக்கும். புஹாரி, ஆச்சிஸ் வண்ணார்பேட்டையில் உள்ளது. மலிவான விலையில் தரமான மதிய உணவை சாப்பிடலாம். ஆச்சீஸ் கான்டினென்டல், இந்திய மற்றும் சீன உணவு வகைகளை வழங்குகிறது. மலிவான இரவு உணவு அல்லது மதிய உணவை சாப்பிட விரும்பும் ஒருவருக்கு இது ஒரு நல்ல வழி.
ஸ்ரீனிவாசன் நகரைச் சேர்ந்த அரேபியன் ஹட், ஏராளமான உணவுகளுடன் எளிமையான தாலியையும் ருசிக்கலாம்.
ஸ்ட்ரீட் ஃபுட்
நகரின் பிரபலமான காபி மையங்களில் ஒன்று மத்திய கஃபே. பல்வேறு வகையான காபி வகைகளை இங்கு அருந்தலாம். இதன் விலை ரூ.50 முதல் ரூ.800 வரை இருக்கும். இது பாளையங்கோட்டை பகுதியில் அமைந்துள்ளது.
மேலும், இங்கு வஉசி மைதான பகுதியில் அமைந்துள்ள தெருக்கள் முழுவதும் ஃபாஸ்ட் புட் வகைகள், சாட் வகைகள், பருத்தி பால், ஜிகர்தண்டா, சப்ஜா சர்பத் போன்ற எளிய ஈவ்னிங் ஸ்னாக்ஸ்கள் ஏராளமாக இடம்பெற்றிருக்கும். மாலை வேளையை ஜாலியாக கழிக்க எண்ணினால் அங்கு சென்று இதையெல்லாம் வாங்கி சாப்பிட்டுவிட்டு பூங்காவையும் ஒரு வலம் வரலாம்.