திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி சீமை - சிறப்பும், அறியப்படாத வரலாறும்!

Tirunelveli
By Sumathi Aug 16, 2023 10:45 AM GMT
Report

திருநெல்வேலி நகரமாக, 1870ஆம் ஆண்டு கிழக்கு இந்திய நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இது பாண்டியரின் இரண்டாவது தலைநகரம். ஒரு காலத்தில் 'திருநெல்வேலிச் சீமை' என அழைக்கப்பட்டது.‌

திருநெல்வேலிச் சீமை

தனித் தமிழ் நடையை கொண்டு கம்பீரத்தோடு திகழும் இந்த மாவட்டம் புராதன சிறப்புகளை மட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகள் ரசிக்கும் வகையிலும் பல்வேறு இடங்களை தனக்குள் அடைத்து வைத்துள்ளது.

திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி சீமை - சிறப்பும், அறியப்படாத வரலாறும்! | Tirunelveli History In Tamil

முன்னதாக, 1064 ஆம் ஆண்டில் சோழ வம்சத்தைச் சேர்ந்த கங்கைகொண்ட சோழன் ஆட்சிக்கு வந்தான். 13 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை அந்த ஆட்சி காலம் தொடர்கின்றது. இதற்கு சான்றாக திருநெல்வேலிக்கு அருகே கங்கைகொண்டான் என்னும் ஊர் இன்றும் இருக்கிறது.

சுதந்திரத்திற்குப் பின்..

இந்திய சுதந்திரத்தைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டம் அக்டோபர் 20, 1986 அன்று தூத்துக்குடி வ.ஊ.சிதம்பரனார் மாவட்டம் மற்றும் திருநெல்வேலி கட்டபொம்மன் மாவட்டம் எனப் பிரிக்கப்பட்டது. ஊர் முழுவதும் எங்குப் பார்த்தாலும் நெல் விளையும் பூமி என்பதை உணர்த்தும் வகையிலே நெல் வேலி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி சீமை - சிறப்பும், அறியப்படாத வரலாறும்! | Tirunelveli History In Tamil

நெல்லையப்பர் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், ராஜகோபாலசுவாமி கோயில், பத்திரகாளி அம்மன் கோயில் என இங்கு கோவில்களுக்கும் பஞ்சம் இல்லை. இவற்றில் பெரும்பாலான கோயில்கள் தனக்கென தனியொரு வரலாற்றைச் சுமந்து நிற்கிறது. நம் நாட்டு விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய மகாகவி சுப்பிரமணிய பாரதியார், வாஞ்சிநாதன், செக்கிழுத்த செம்மல் வ.ஊ.சிதம்பரம் பிள்ளை, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற மாபெரும் வீரர்களை பெற்ற பெருமை திருநெல்வேலிக்கு உள்ளது.

அல்வா இல்லாம எப்படி?

பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறன் நெல்லை நகர மக்கள் எதிர்கொண்டு வரவேற்ற இடம் பாண்டியபுரம் என்றும் மக்களால் போற்றப்படுகிறது. மங்கையர்க்கரசி மகளிர் எதிர்கொண்டு வரவேற்ற இடம் திருமங்கை நகரம் என்று முன்னோர்களால் போற்றப்படுகிறது. பண்டைய காலத்தில் திருநெல்வேலிக்கு வேணுவனம் என்ற பெயர் பெற்று அழைக்கப்பட்டது. மூங்கில் காடு இதன் அர்த்தமாகும். மூங்கில் இங்கு அதிகமாக விளையும்.

திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி சீமை - சிறப்பும், அறியப்படாத வரலாறும்! | Tirunelveli History In Tamil

இவ்வளவு பேசிக்கொண்டிருக்கும்போது அல்வாவைப் பற்றிப் பேசாமல் எப்படி..? இந்த நகரத்தில் அல்வாவுக்கு என தனிக்கடை ஒன்று 1882ஆம் ஆண்டுதான் திறக்கப்பட்டது. கடையைத் திறந்தவர் ஒரு சிங். பெயர் ஜெகன் சிங். முன்னாட்களில் கிழக்கிந்திய நிறுவனத்தினர் பல்வேறு நகரங்களில் பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வந்தனர். அப்போது தெருக்களில் அல்வாக்கள் விற்பது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.

வற்றாத ஜீவநதி

அதன் வழியில் முதல் முறையாக மாவட்டத்தில் முதன் முதலில் இருட்டுக்கடை அல்வா கடை தோன்றியுள்ளது. அதுமட்டுமல்ல உடலை ஆரோக்கியத்தோடு வைத்துக் கொள்ள மாவட்டத்தைச் சுற்றிப் பல அருவிகள் உள்ளது. குற்றாலம், அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி என அழகியலையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அருவிகள் இத்தனை இருக்கும்போது இங்கு அணைகள் எத்தனை இருக்கும்.

திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி சீமை - சிறப்பும், அறியப்படாத வரலாறும்! | Tirunelveli History In Tamil

ஆம், அடவி நயினார் அணை, கடனாநதி அணை, மணிமுத்தாறு அணை, ராமநதி அணை, குண்டாறு அணை எனப் பல சிறப்புகளை உள்ளடக்கியுள்ளது. அதேபோல், திருநெல்வேலி வளமாக செழிப்பாக உள்ளது என்றால் அது இங்கு ஓடும் தாமிரபரணி ஆறு தான் காரணம். இந்த ஆறு தண்பொருநை என்று முன்னோர்களால் போற்றப்படுகிறது.\

 உற்பத்தி ஏராளம்

இங்கு பச்சையாறு, மணிமுத்தாறு, சிற்றாறு, கரையாது என்று பல கிளைகள் ஆறுகளாக பிரிந்து மிகப்பெரிய மாவட்டமாக தெரிகிறது. திருநெல்வேலி மாவட்ட பொருளாதார வளர்ச்சியில் முதன்மை பங்கு பெற்று வருகிறது . உழவுத் தொழிலுக்கு முதன்மை பெற்று மாவட்டமாக உள்ளது திருநெல்வேலி. தாமிரபரணி ஆற்றின் மூலம் இங்கு உழவுத்தொழில் நடைபெற்று வருகின்றன. இங்கு குலத்து பாசனமும் கிணற்றுப்பாசனம் கூட பயன்பாட்டில் உள்ளன.

திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி சீமை - சிறப்பும், அறியப்படாத வரலாறும்! | Tirunelveli History In Tamil

இங்கு சிறு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், காய்கறி,பருத்தி, பயறு வகைகள் போன்றவற்றை பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு விளையும் வாழைத்தார்கள் தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, அந்திரபிரதேஷ் போன்றவற்றை மாநிலங்களிலும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் நெல்லை மாவட்டம் தான் முதலிடம். கடலோர மீன்பிடித் தொழிலும் இந்த மாவட்டங்களில் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் பெருமையும் இங்கதான்..

இங்கு பல வகையான தரமுள்ள மீன்கள் இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நகரின் மேற்கே பேட்டை என்னும் ஊர் உள்ளது. வணிகம் நடைபெறும் பகுதியை பேட்டை என அழைத்தனர். இங்கு முத்துக்குளித்தல் சிறப்பாக நடைபெறுகிறது. தமிழ் இலக்கியங்களில் இதனை போற்றப்பட்டுள்ளது. கோர்க்கையில் விளைந்த பாண்டிய நாட்டு முத்து உலகப் புகழ் பெற்றதாக விளங்கியது.

சங்க காலங்களில் இங்கு கிடைக்கும் கொற்கை முகங்கள் முத்துக்களை வாங்க கிரேக்கம், உரோமாபுரி ஆகிய நாடுகளை சார்ந்தவர்கள் ஓடோடி வருபவர்களாம். தாமிரபரணி ஆற்றின் மேற்கு கரையில் திருநெல்வேலி கிழக்கு கரையிலும் பாளையங்கோட்டை அமைந்துள்ளன. இவ்விரண்டு நகரங்களுக்கு இடையே இரட்டை நகரம் எனவும் அழைக்கப்பட்டது.

பாளையங்கோட்டையில் அதிகம் பெருமளவில் கல்வி நிலையங்கள் இருப்பதால் இந்நகரம் தென்னிந்தியாவில் ஆக்ஸ்போர்ட் எனப்படும். நெல்லை நகரில் மேற்கை பேட்டை என்னும் ஊர் உள்ளது வணிகம் நடைபெறும் சிறந்த பகுதியாக பேட்டை என அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மரபினை பற்றியும் பயணிக்கும் பயிற்சி நிலையங்கள் இருக்கின்றன. ஜி.யு.போப், கால்டுவெல், வீரமாமுனிவர் போன்ற அயல்நாட்டு அறிஞர்களை தமிழின்பால் ஈர்த்த பெருமை திருநெல்வேலி மாவட்டத்தையே சேரும்.