நெல்லை தேர்தலில் அடுத்தடுத்த சிக்கல் ..?சிக்கிய 4 கோடி..! 14 வேட்பாளருக்கு பரபரப்பு நோட்டீஸ்..!
நெல்லை மக்களவை தொகுதியின் மீது தான் தற்போது தமிழ்கத்தின் கவனம் திரும்பியுள்ளது.
4 கோடி பறிமுதல்
தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ4 கோடி ரொக்க விவகாரம் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மக்களவை பாஜக வேட்பாளரான நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் 3 பேரிடம் இருந்து இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டல் போன்ற இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் தமக்கும் சம்மந்தம் இல்லை என நயினார் மறுப்பு தெரிவித்துள்ளார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ரத்தா..?
இதே போல நெல்லை மக்களவை தொகுதியின் வேட்பாளர்கள் 14 பேருக்கு தேர்தல் செலவின பார்வையாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவு கணக்குகளை இன்று மாலை 5 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், சமர்ப்பிக்காத நிலையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
கணக்கு தாக்கல் செய்ய தவறினால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களின் அனுமதி ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணம் பறிமுதல் செய்யப்பட்டது, வேட்பாளர்களுக்கு தேர்தல் பார்வையாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது போன்ற சம்பவம் மக்களிடம் கடந்த 2019-ஆம் ஆண்டில் வேலூரில் தேர்தல் நிறுத்தப்பட்டதை போல, இப்பொது நெல்லையில் தேர்தல் நடக்குமா.? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.