10 ஆண்டு ஆட்சி Trailer தான் - இனிமேல் தான்...! ஹெச்.ராஜா பரபரப்பு கருத்து

By Karthick Apr 07, 2024 06:10 AM GMT
Report

1980 ஏப்ரல் 6ஆம் தேதி உருவாக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

பாஜக

நாட்டின் மத்திய ஆளும் கட்சியாகவும், பல மாநிலங்களில் மாநில அரசாகவும் இருக்கும் பாஜக, முன்னர் இருந்ததை விட தற்போது இந்திய அரசியலில் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது.

h-raja-comments-on-modi-government

10 ஆண்டு ஆட்சி நிறைவடையும் நிலையில், நடைபெறவுள்ள மத்திய பொது தேர்தலுக்கு அக்கட்சி தீவிரமாக பணியாற்றி வருகின்றது. 400 மக்களவை தொகுதிகளை குறிவைக்கும் பாஜக, வலுவான இந்தியா கூட்டணியை எதிர்த்து களம் காணுகிறது.

h-raja-comments-on-modi-government

கடந்த 1980-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி உருவாக்கப்பட்ட பாஜக, நேற்று தன்னுடைய 44-வது வருடத்தை எட்டியது. இதனை தொடர்ந்து நாடெங்கிலும் பாஜகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

இனிமேல் தான்....

சென்னை கமலாலயத்தில் பாஜக தமிழக இணை பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி, ஹெச்.ராஜா, கரு.நாகராஜன் போன்றோர் கட்சிக் கொடியேற்றினார்கள்.

h-raja-comments-on-modi-government

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா பேசும் போது, 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் நடந்தது வெறும் ட்ரையல் தான் என்று குறிப்பிட்டு, இனி ஆல் ரியல் தான் என்று இனிமேல் தான் உண்மையான முன்னேற்றம் மேம்பாடு என குறிப்பிட்டார்.