இரும்புக் கம்பி அறையில் பயங்கரம்..இறந்த பாகனை நினைத்து சரிந்த தெய்வானை யானை..!

Thoothukudi Elephant Death Murugan
By Vidhya Senthil Nov 19, 2024 11:20 AM GMT
Report

 திருச்செந்தூர் முருகன் கோவில் யானை தெய்வானை இன்னும் வருத்தத்திலேயே உள்ளது.

 கோவில் யானை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் வளர்க்கப்பட்டு வந்த 26 வயதான தெய்வானை என்கிற யானை, நேற்று திடீரென யானையின் பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலனை தாக்கியதில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

tiruchendur murugan temple elephant

இதனையடுத்து யானை ஏன் இவ்வாறு நடந்து கொண்டது என்பது குறித்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். அதில் பாகனின் உறவினர் சிசுபாலன் யானை முன்பு நின்று நீண்ட நேரம் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார்.

பெண் யானைக்கு மதம் பிடிக்காது; ஆனால் தாக்கியது ஏன்? வெளியான அதிர்ச்சி தகவல்

பெண் யானைக்கு மதம் பிடிக்காது; ஆனால் தாக்கியது ஏன்? வெளியான அதிர்ச்சி தகவல்

அப்போது ஆத்திரமடைந்த யானை சிசுபாலனை கால் மற்றும் தும்பிக்கையால் தாக்கியுள்ளது.அப்போது சிசுபாலனை காப்பாற்ற வந்த பாகன் உதயகுமாரையும் யானை தாக்கியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்.

 ஆலோசனை

இந்த நிலையில் யானை தெய்வானையைத் திருச்சி, முதுமலை, டாப்ஸ்லிப் ஆகிய 3 யானைகள் மறுவாழ்வு மற்றும் புத்தாக்க பயிற்சி மையத்திற்கு அனுப்புவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

அந்த யானை இன்னும் வருத்தத்திலேயே உள்ளது. இன்னும் முகமே சரியாக சாப்பிடவும் இல்லை எனக் கூறப்படுகிறது.

tiruchendur murugan temple elephant attack

பயிற்சி மையத்தில் யானைகளுடன் யானைகளாக இருந்தால் எந்த சிக்கலும் இல்லை. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக அதன் மனம் மாறும் என்பதால் யானையைப் புத்தாக்க முகாமிற்கு அனுப்புவது குறித்து கோயில் நிர்வாகமும் வனத்துறையும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.