விண்ணை பிளந்த அரோகரா கோஷம்.. திருச்செந்தூரில் நடந்த ஆவணித் திருவிழா தேரோட்டம்!

Tamil Cine Talk Tamil nadu Thoothukudi Murugan
By Vidhya Senthil Sep 02, 2024 01:40 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in கோவில்
Report

  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

  திருச்செந்தூர் 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உலகப் புகழ்பெற்றது. இந்தக் கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். மற்ற அறுபடை கோவில்களில் முருகனை மலையேறி தரிசித்து விட்டு கீழே இறங்கி வருவார்கள். 

விண்ணை பிளந்த அரோகரா கோஷம்.. திருச்செந்தூரில் நடந்த ஆவணித் திருவிழா தேரோட்டம்! | Tiruchendur Murugan Temple Avani Festival

ஆனால் திருச்செந்தூரில் மட்டும் மக்கள் கடல் மட்டத்திற்குக் கீழிறங்கி முருகனை தரிசித்து பின்னர் மேலே ஏறிச் செல்வார்கள். இதனால் திருச்செந்தூர் வாழ்வில் ஏற்றத்தைத் தரும் என்பது ஐதீகம் . இந்தக் கோவிலில் நடைபெறும் தைப்பூசம், வைகாசி விசாகம், மாசித் திருவிழா ஆவணித் திருவிழா போன்ற நிகழ்வுகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

திருச்செந்தூரில் நடந்த வினோதம்; கண்முன்னே மாறிய காட்சிகள் - என்ன நடந்தது?

திருச்செந்தூரில் நடந்த வினோதம்; கண்முன்னே மாறிய காட்சிகள் - என்ன நடந்தது?

 ஆவணித் திருவிழா 

அந்தவகையில் இந்த ஆண்டு ஆவணித் திருவிழா ஆகஸ்ட் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவின் சிகர நிகழ்வான 10ஆம் நாள் திருவிழாவாக இன்று காலை 6:30 மணிக்கு மேல் சிம்ம லக்னத்தில் திருத்தேரோட்டம் நடைபெற்றது.

விண்ணை பிளந்த அரோகரா கோஷம்.. திருச்செந்தூரில் நடந்த ஆவணித் திருவிழா தேரோட்டம்! | Tiruchendur Murugan Temple Avani Festival

இந்தத் தேரோட்ட நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக சுவாமிக்குச் சிறப்புப் பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது .