கோவிலில் உலா வந்த வெள்ளை யானை - திருச்செந்தூரில் நெகிழ்ந்த பக்தர்கள்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு,வெள்ளை யானை நிறத்தில் வீதி உலா நடைபெற்றது.
திருச்செந்தூர்
ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று கைலாய மலைக்கு வெள்ளை யானையை அனுப்பி 63 நாயன் மார்களில் ஒருவரான சுந்தர மூர்த்தி நாயன்மார்களை அழைத்து சென்றதாக வரலாறு உண்டு.
இதனை நினைவுப்படுத்தும் விதமாக தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வெள்ளை யானை முன் செல்ல சுந்தரமூர்த்தி நாயனார் தங்க சப்பரத்தில் உள்ள வரும் வைபவம் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம்.
வெள்ளை யானை
அந்த வகையில் இந்த ஆண்டும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு முருகப்பெருமானுக்கு காலபூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோவில் யானை தேவானை உடல் முழுவதும் அரிசி மாவு, திருநீறு பூசப்பட்டு வெள்ளை நிறத்தில் காட்சியளித்தது.
தொடர்ந்து தங்க சப்பரத்தில் சுப்பிரமணிய சுவாமி வீதி உலா நடைபெற்ற போது முன் தேவானை யானை தொடர்ந்து சென்றது. இதனை கண்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நெகிழ்ச்சியில் அரோகரா அரோகரா என கோஷமிட்டனர்.