ஜெய்ஸ்ரீ ராம் என்று சொன்னாலும் திமுக ஏற்றுக்கொள்ளும் - சேகர்பாபு பேச்சு!
ஜெய்ஸ்ரீ ராம் என்று சொன்னாலும் திமுக ஏற்றுக்கொள்ளும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சேகர்பாபு பேச்சு
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, “பழனி ஆண்டவர் கல்லூரியில் ஆக.24,25ஆம் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுகிறது.
வேல் யாத்திரை மேற்கொண்ட மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விரும்பினால் மாநாட்டில் பங்கேற்கலாம். எல். முருகன் முருக மாநாட்டிற்கு வரவேண்டும், இதனை என்னுடைய நேரடி அழைப்பாக ஏற்றுக்கொள்ளவும். முருகனின் மாநாடு என்பதால் முருக பக்தர்கள் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.
ஜெய்ஸ்ரீ ராம்
கோவிலுக்குள் தொலைபேசி கொண்டு செல்வதை படிப்படியாக குறைத்து வருகிறோம். மதுரை, பழனி, திருச்செந்தூர் கோவில்களில் அலைபேசி எடுத்து செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. கடவுள் இல்லை என திமுக எப்போது சொன்னது?
இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பெளத்தம் என அனைத்து மதத்தினரும் அவரவர் மதங்களை வழிபட சிக்கல் இல்லை. அதேபோல் இந்துக்களும் அவர்களின் மத வழிபாடு செய்ய தடை இல்லை.ஜெய் ஸ்ரீராம் என்றாலும், அரோகரா, கோவிந்தா கோவிந்தா என சொன்னாலும் ஏற்றுக்கொள்வோம்.
அண்ணாமலை எடுத்த எந்த ஆயுதமும் போர்க்களத்தில் படை பலத்துடன் செயல்பட்டது அல்ல. இந்துக்கள் விரும்பும் கடவுளை வழிபட அனைத்து சுதந்திரமும் தமிழ்நாட்டில் உள்ளது. பக்தர்களின் வழிபாட்டு உரிமையில் திமுக அரசு தலையிடாது. திருப்பதியை மிஞ்சும் அளவிற்கு திருச்செந்தூர் கோயில் பணிகள் நடைபெற்றுவருகிறது என்று தெரிவித்துள்ளார்.