விரைவில்..முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெய் ஸ்ரீ ராம் என சொல்வார் - அண்ணாமலை சவால்!
விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெய் ஸ்ரீ ராம் என சொல்வார்என அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
அண்ணாமலை
சென்னையில் செய்தியாளர்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக காவல்துறையை பாராட்டுகிறேன். காங்கிரஸ் கட்சியில் முதன்மையான ஒருவரை சிறைப்பிடித்துள்ளார்கள்.
யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுத்துள்ள நடவடிக்கை நம்பிக்கை அளிக்கிறது. கட்சி பேதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை முனைப்பு காட்கிறது.தமிழ்நாட்டில் கடவுள் மறுப்புக்கொள்கை வேலைக்கு ஆகாது என திமுகவுக்கு தெரிந்துவிட்டது.
எதை சொல்லி ஆட்சிக்கு வந்தார்களோ அதையெல்லாம் மாற்ற வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. பாஜகவின் நடவடிக்கை திமுகவுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் தான், பழனி முருகன் மாநாட்டை நடத்துகிறார்கள்.
மு.க.ஸ்டாலின்
முருகன் மாநாடு நடத்தும் திமுக அரசு இதே வேகத்தில் சென்றால் 2026 தேர்தலுக்கு முன் முதல்வரே ஜெய் ஸ்ரீ ராம் என சொல்வார். சேகர் பாபு அதற்கு அடித்தளம் போட்டுள்ளார். ஒரு அமைச்சர் திமுகவின் ஆட்சி ராமர் ஆட்சியை போல் நடக்கிறது எனக் கூறியுள்ளார்.
இதே வேகத்தில் சென்றால் அமைச்சர்களும் ஜெய் ஸ்ரீராம் சொல்லிவிடுவார்கள். வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்தியர்களின் ஒவ்வொருவர் இதயத்தையும் கனக்கச் செய்கிறது.
தமிழக மீனவர் பிரச்சனையில் இலங்கை - இந்தியா இடையிலான 2+2 பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும்.. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.