கோவில் கலச நவதானியம்; 12 ஆண்டுக்கு பின் எப்படி இருக்கு தெரியுமா? அதிசயம் ஆனால் உண்மை!
தானியம் 15 ஆண்டுகளுக்கு பிறகும் நல்ல நிலையில் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கலச நவதானியம்
2009ம் ஆண்டு தூத்துக்குடியின் திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெறுவது வழக்கம் என்ற முறையில், 2021ம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், கொரோனா தொற்றால் குடமுழுக்கு நடைபெறவில்லை. எனவே, தற்போது அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், 137 உயரத்திலிருந்த கலசத்திலிருந்து வரகு தானியம் எடுக்கப்பட்டுள்ளது.
குடமுழுக்கு
சுமார் 12 ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்த வரகு அப்படியே இருந்துள்ளது. இது பக்தர்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. வறட்சி, போர் உள்ளிட்ட காலங்களில் தானியங்களை மீண்டும் விதைக்கவே கலசத்தில் தானியம் வைக்கப்படுகிறது என்று சிலர் கூறுகினர்.
ஆனால், அது 13% கீழ் ஈரப்பத நிலையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், இதே ஈரப்பதம் 5%க்கும் கீழ் குறைந்துவிட்டாலும் அதை பயன்படுத்த முடியாது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தமிழ் சமூகத்தில் தானியங்கள் என்பது செழிப்புக்கான அறிகுறி என்பதால அவ்வாறு கலசங்களில் வைக்கப்படுவதாக பரவலாக பார்க்கப்படுகிறது.