திருச்செந்தூரில் நடந்த வினோதம்; கண்முன்னே மாறிய காட்சிகள் - என்ன நடந்தது?
திருச்செந்தூர் கடல் சுமார் 100 அடி தூரத்திற்கு உள்வாங்கியது.
பெளர்ணமி
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று. கோவிலின் அருகே கடற்கரை அமைந்துள்ளதால் பக்தர்கள் கடலில் புனித நீர் ஆடிவிட்டே, சுவாமியை தரிசனம் செய்வது வழக்கம்.
இந்நிலையில், பெளர்ணமியை முன்னிட்டு கடலானது சுமார் 100 அடி தூரம் சட்டென உள்வாங்கியது. இதனால் கடலின் அடியில் இருந்த பாறைகள் அதிக அளவில் வெளியே தெரிந்தது. கடல் அலைகள் இன்றி குளம் போல் காட்சியளித்தது. பக்தர்கள் உடனே அதிர்ச்சியில் ஃபோட்டோக்கள் எடுத்து மகிழ்ந்தனர்.
உள்வாங்கிய கடல்
முன்னதாக காலையில் 50 அடி தொலைவுக்கு கடல் உள்வாங்கியே காணப்பட்டது. மதியம் இயல்பு நிலைக்கு திரும்பியது. கடந்த 2004ல் கன்னியாகுமரி சுற்றியுள்ள கிராமங்களில் சுனாமியின் பாதிப்பு பெருமளவில் இருந்த நிலையில்,
திருச்செந்தூர் முருகன் கோவில் பகுதியில் மட்டும் சுமார் 200 அடி தூரம் கடல் உள்வாங்கி ஆச்சர்யம் அளித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், சுமத்ரா தீவிலிருந்து புறப்பட்ட சுனாமி அலைகளிலிருந்து வேகத்தை இலங்கை வாங்கி கொண்டது.
அது திருச்செந்தூரை தாக்கவில்லை. எதிர்விளைவாக கடல் மட்டும் உள்வாங்கியதாக கூறுகின்றனர்.