விண்ணை முட்டிய ஆறுமுகன் கோஷம் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹாரம்

By Irumporai Oct 30, 2022 12:14 PM GMT
Report

முருகன் கோவிலில் கந்தசஷ்டியை முன்னிட்டு இன்று திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மிகவும் எளிமையான முறையில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.

பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிய நிலையில் கந்தசஷ்டி விழா களைகட்டியுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலில், 6-ம் நாளான இன்று மாலையில் நடைபெறுகிறது.

விண்ணை முட்டிய ஆறுமுகன் கோஷம் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹாரம் | Thiruchendur Soorasamharam

இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று மாலை சூர சம்ஹாரம் நடைபெறும், கந்த புராணத்தை அடிப்படியாக கொண்டு நடைபெறும் சூராசம்ஹாரம் இன்று மாலை 5:30 மணிக்கு திருசெரெந்தூரில் பல முகங்கள் எடுத்து மிரட்டிய சூரனை வதம் செய்தார் .

விண்ணை முட்டிய ஆறுமுகன் கோஷம் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹாரம் | Thiruchendur Soorasamharam

முருகன் இந்தனை பல்லாயிரகணக்கான மக்கள் திருச்செந்தூரில் கூடி முருகா அரோகரா என முழங்கி சூர சம்ஹாரத்தை கண்டுகளித்து. ஆறுமுகவேலனான கந்தனை முருகனின் ஆறுலை பெற்று சென்றனர்