தோசைக்கல்லில் போகாத எண்ணெய் பிசுக்கு; ஒரே நிமிஷத்தில் காலி - இதை ட்ரை பண்ணுங்க!
தோசைக்கல்லின் எண்ணெய் பிசுக்கை நீக்கும் டிப்ஸை பார்க்கலாம்.
எண்ணெய் பிசுக்கு
தோசைக்கல்லை அடிக்கடி சுத்தம் செய்ய முடியாது. சோப்பு போட்டு கழுவினால் அந்த தோசைக்கல்லில் தோசை சுட்டால் நன்றாக தோசை வராது.
அதனால் பல வருடங்கள் அதில் எண்ணெய் பிசுக்கு அப்படியே இருக்கும். இந்த எண்ணெய் பிசுக்கை எப்படி அகற்றலாம் என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
எப்படி சரிசெய்வது?
எண்ணெய் பிசுக்கு படிந்திருக்கும் தோசைக்கல்லை எடுத்து, ஸ்டவ்வைப் பற்ற வைத்து அதில் வைக்க வேண்டும். லேசாக சூடானதும்,
உங்கள் வீட்டில் காய் கறி நறுக்கிற கத்தியை எடுத்து, தோசைக்கல்லில் படிந்திருக்கிற எண்ணெய் பிசுக்கை சுரண்டினால் உரிந்து வந்துவிடும்.
அதை நீக்கிவிட்டு ஒரு துணியால் தோசைக் கல்லை நன்றாகத் துடைத்தால் ஒரே நிமிடத்தில் எண்ணெய் பிசுக்கு காணாமல் போய்விடும். ஆனால், தோசைக் கல்லின் நடுப்பகுதியில் சுரண்டக் கூடாது. என்பது குறிப்பிடக்கூடாது. இதை டிரை செஞ்சு பாருங்க..