மடிந்து கிடக்கும் சதை; இறுக என்ன சாப்பிடனும்? இதை நோட் பண்ணுங்க!
சதை தளர்ந்து இருப்பதை தடுப்பதற்கான டிப்ஸ் குறித்து பார்க்கலாம்.
சதை தளர்வு
உடல் சதையில் தளர்வு மற்றும் தொய்வு ஏற்படுவது இன்றைய காலகட்டத்தில் பெரிய பிரச்சனையாக காணப்படுகிறது. மேலும், அதனை தடுக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
சதை தளர்வதை ஆரோக்கிய ரீதியாக அணுக வேண்டியது மிகவும் அவசியம். இதனை தடுக்க முதலில் உடற்பயிற்சியை அதிகரிக்க வேண்டும்.
கொள்ளு
தொடர்ந்து நடைபயிற்சியை கடைபிடிக்க வேண்டும். இடுப்பு பகுதியில் சதை தொய்வு ஏற்படுவதை தடுக்க பிளான்க் வகையிலான பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
தொய்வான சதைகளை இறுக்க வேண்டுமென்றால் கொள்ளு சாப்பிடலாம். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதால், நீண்ட நேரம் முழுமையாக இருக்க உதவுகிறது.
இதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். குறிப்பாக, அரிசி உணவுகளை குறைத்து விட்டு புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.