வீட்டில் எலெக்ட்ரிக் வண்டி இருக்கா? அப்போ தீ விபத்தை தடுக்க அவசியம் இதை பாருங்க!
மின்சார வாகனங்களை பராமரிக்க சில எளிமையான டிப்ஸ்களை இந்த பதிவில் காணலாம்.
எலெக்ட்ரிக் வண்டி
இன்றைய காலக்கட்டத்தில் பெட்ரோல் விலை அவ்வப்போது உச்சத்தை தொட்டுவிட்டு இறங்குவதால் பெரும்பாலான மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை தேடி செல்ல தொடங்கியுள்ளனர். எனவே அதன் தேவை மெல்ல மெல்ல அதிகரித்து வருகின்ற நிலையில்,
எலெக்ட்ரிக் வாகன தொழில்நுட்பம் பலருக்கு புதியதாக இருக்கலாம். இதனால் அதை இயங்குவதிலும் பராமரிப்பதிலும் பல குழப்பங்கள் ஏற்படக்கூடும். இந்த நிலையில், எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரிகள் மிகவும் முக்கியமான ஒன்று.
எனவே அதை சரியாக பராமரிக்காவிட்டால் பிரேக்டவுன்ஸ் அல்லது தீ விபத்துகள் போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட வழிவகுக்கும். ஆகையால் இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்க சிலவற்றை பின்பற்றுவது அவசியம்.
விபத்தை தடுக்க..
அதாவது, அவசரமாக வெளியே செல்ல வேண்டிய சூழல் இருக்கும்போது வேகமாக சார்ஜ் செய்வது உண்டு, ஆனால் இது அதிக வெப்பத்தை உருவாக்குகிறது. இதுபோல அடிக்கடி ஃபாஸ்ட் சார்ஜிங் செய்வது காலப்போக்கில் மின்சார வாகனத்தின் பேட்டரியை சிதைக்கக்கூடும். EV பேட்டரியை 20 சதவீதத்திற்கு கீழ் குறைய விடக்கூடாது.
அதே சமயம் எல்லா நேரத்திலும் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்யவும் கூடாது. பேட்டரியை 20 சதவீதம் முதல் 80 சதவீதம் வரையிலான சார்ஜிங் லெவலில் வைத்திருப்பதினால் அந்த பேட்டரி செல்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்க வழிவகுக்கும்.
பொதுவாக EV பேட்டரிகள் மிதமான வெப்பநிலையில் சிறப்பாக செயல்படக் கூடியவை. அதேபோல அதிக வெப்பம் அல்லது அதிக குளிர்ச்சி உள்ள சூழலில் பேட்டரியின் ஆரோக்கியம் மற்றும் செயல்திறனை வெகுவாக குறைக்கும்.
அவசியம்
எனவே வெப்பமான நேரத்தில் வாகனத்தை நிழலிலும், குளிர்காலத்தில் சற்று சூடான இடத்திலும் நிறுத்துவது பேட்டரி லைஃபை நீட்டிக்கும். ஒரு சில மின்சார வாகனங்கள் டெம்ப்ரேச்சர் மேனேஜ்மென்ட் சிஸ்டம்களை கொண்டே உருவாக்கப்படுகிறது.
அது போன்ற வண்டிகள் தானாகவே வெப்பநிலைக்கு தகுந்ததுப்போல் பேட்டரியை பராமரிக்கின்றன. மின்சார வாகனங்கள் பெட்ரோல் வண்டியைப் போல் ஓட்டக்கூடாது. அதாவது ஆக்ஸிலரேட்டர் மற்றும் பிரேக் மீது கால் வைத்து அதிக அழுத்தம் கொடுத்து வாகனத்தை ஓட்டும்போது,
பேட்டரி உள்ளிட்ட வாகனத்தின் உதிரிபாகங்கள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் பேட்டரி வேகமாக ஓடச்செய்து இறுதியில் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. ஏனினும் வாகனத்தை சீராக ஒட்டுவதால் பேட்டரி செயல்திறன் பாதிப்படையாமல் ஒட்டுமொத்த ஆற்றல் நுகர்வை (energy consumption) குறைக்கிறது.