மழை காலத்தில் துணிகள் காயவில்லையா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
மழை காலத்தில் எவ்வாறு துணிகளை காய வைப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
மழை காலம்
மழை காலத்தில் வெளியே செல்வது ஒரு சிக்கல் என்றால் துவைத்த துணியை காய வைப்பது மற்றொரு பெரிய பிரச்சினை.
குளிர்ந்த காற்று வீசுவதால் துணி காய நேரம் எடுக்கும் அல்லது காய்ந்து கொண்டிருக்கும் போது மழை பெய்து மறுபடியும் துணியை நனைத்து விடும். மழை காலத்தில் துணியை காய வைக்க சில டிப்ஸ்களை பார்க்கலாம்.
துணி காய டிப்ஸ்
முடிந்த வரை மழை காலத்தில் ஜீன்ஸ் போன்ற அதிக எடை கொண்ட கடினமான துணிகளை துவைப்பதை தவிர்க்க வேண்டும். இவை காய நீண்ட நேரம் பிடிக்கும்.
துணியை வாஷிங் மிஷினில் துவைத்தால், துவைத்து முடித்த பின் மீண்டும் டிரையர் ஆப்ஷனில் போட்டு எடுக்க தண்ணீர் கொஞ்சம் கூட இல்லாமல் பிழிந்துவிடும். கையால் துவைக்கும் போது நன்றாக பிழிந்து விட்டு கொஞ்ச நேரம் குழாயில் உலர்த்தி நீர் வடிந்த பின் காய போடவும்.
வீட்டின் உள்ளே துணிகளை கட்டி காயப் போடுவதால் சிலருக்கு ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உண்டாக்கலாம். இதனால், துணிகளை காய வைப்பதற்கு என கடைகளில் கிடைக்கும் ஸ்டாண்டுகளை பயன்படுத்தலாம். இதில் துணிகளை இடைவெளிவிட்டு போட்டால் சீக்கிரமாக உலரும்.
துர்நாற்றம்
மழைக்காலத்தில் சூரிய வெளிச்சம் இல்லாமல் துணி காய்வதால், உலர்ந்த பின் துணியில் துர்நாற்றம் ஏற்படலாம். இதனை தடுக்க, துணி அலசும் கடைசி தண்ணீரில் லாவெண்டர், டீ ட்ரீ அல்லது யூகலிப்டஸ், வினிகர் போன்றவற்றில் எதாவது ஒன்றில் சில துளிகளை சேர்க்கலாம்.
ஈரமான துணி உடனே காய வேண்டுமென்றால் டீஹ்யுமிடிஃபையர் (dehumidifier) இருந்தால் அவற்றை பயன்படுத்தி துணியில் இருக்கும் ஈரப்பதத்தை வேகமாக நீக்கலாம். அல்லது ஹேர் ட்ரையரை கூல் செட்டிங்கில் வைத்து, 6 இன்ச் இடைவெளியில் துணிகள் மீது காட்டினால், துணிகள் உலரும்.