நள்ளிரவில் 12 ரோபோக்களை பேசி மயக்கி கடத்திய சக ரோபோ - வைரலாகும் வீடியோ

China Artificial Intelligence Technology
By Karthikraja Nov 24, 2024 06:20 AM GMT
Karthikraja

Karthikraja

in சீனா
Report

குட்டி ரோபோ 12 ரோபோக்களை கடத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏஐ தொழில்நுட்பம்

செயற்கை நுண்ணறிவு எனும் ஏஐ தொழில்நுட்பம் நாளுக்கு நாள் பிரம்மாண்ட வளர்ச்சி பெற்று வருகிறது. ஆரம்பத்தில் சில துறைகளில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த ஏஐ தற்போது அனைத்து துறைகளிலும் கால் பதிக்க துவங்கி விட்டது. 

ai robots

கேட்ட கேள்விக்கு பதில் அளிப்பது முதல் கோடிங் எழுதுவது, புகைப்படம் உருவாக்குவது தாண்டி பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு பயன்பட்டு வருகிறது. ஏஐ தொழில்நுட்பம் மூலம் எந்த அளவுக்கு பயன் உள்ளதோ அதே அளவிற்கு ஆபத்தும் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்தும் வருகின்றார்கள். 

தற்கொலை செய்து கொண்ட உலகத்தின் முதல் ரோபோ - பணிச்சுமை காரணமா?

தற்கொலை செய்து கொண்ட உலகத்தின் முதல் ரோபோ - பணிச்சுமை காரணமா?

ரோபோ கடத்தல்

அந்த எச்சரிக்கையை உறுதிப்படுத்துவது போல் சீனாவின் ஷாங்காய் நகரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள உள்ள ஷோரூமில் erbai என்னும் ஒரு சிறிய ரோபோ ஒன்று மற்ற ரோபோக்களிடம் தங்களது வாழ்க்கை பற்றி கேட்கிறது.

'நீ அதிக நேரம் வேலைப் பார்க்கிறாயா?' என்று erbai ரோபோ கேட்கிறது. அதற்கு 'எனக்கு லீவே கிடையாது' என மற்றொரு ரோபோ பதிலளிக்கிறது. 'உங்கள் வீட்டிற்கு செல்ல மாட்டியா' என அந்த சிறிய erbai ரோபோ கேட்கிறது. அதற்கு 'எனக்கு வீடே கிடையாது' என பதிலளிக்கிறது. 

erboi robot kidnap 12 robot

அப்படியானால் அனைவரும் எங்கள் வீட்டிற்கு வாருங்கள் என அந்த குட்டி erbai ரோபோ அழைக்கிறது. அந்த குட்டி ரோபோவின் அழைப்பை ஏற்று ஒவ்வொரு ரோபோவாக அதன் பின்னால் செல்கிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடத்தல் உண்மை

இந்த வீடியோவை பார்த்த பலரும் முதலில் இது பிராங் ஆக இருக்கும் என நினைத்தனர். ஆனால் அந்த ரோபோக்களை தயாரித்த நிறுவனங்கள், இது பிராங் இல்லை, கடத்தல் உண்மைதான். ஆனால் பரிசோதனை என கூறி உள்ளனர். 

erbai ரோபோவை தயாரித்த நிறுவனம் மற்றொரு ரோபோ தயாரிப்பு நிறுவனத்திடம் சென்று உங்கள் ரோபோக்களை கடத்த விரும்புகிறீர்களா என கேட்டுள்ளார்கள். அந்த சோதனை முயற்சிக்கு ரோபோ நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி மற்ற ரோபோக்களை வேலையை விட்டு பின்னாடி வர வைக்குமாறு erbai ரோபோவிற்கு கட்டளை வழங்கப்படுகிறது. erbai ரோபோ தனது கட்டளையை சரியாக நிறைவேற்றி இருக்கிறது.

இந்த சம்பவம் இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ரோபோ மற்றொரு நிறுவனத்தின் கட்டளைக்கு பணிந்து பின்னல் சென்றது எப்படி? ரோபோவிற்கு மனிதர்களை போல் உணர்வு உண்டா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.