80 ஆண்டுகளுக்கு முன் பூமி எப்படி இருந்தது தெரியுமா? Time Travel செய்யனுமா!

Google
By Sumathi Sep 27, 2024 01:30 PM GMT
Report

கூகுள் எர்த் அமைப்பில் புதிய அம்சம் வெளியாகவுள்ளது.

கூகுள் எர்த் 

கூகுள் எர்த் என்பது ஒரு இணையம் மற்றும் கணினி பயன்பாடாகும். இது கிரகத்தின் 3D பிரதிநிதித்துவத்தை வழங்குகிறது. நகரங்கள் மற்றும் நிலப்பரப்புகளை செயற்கைக்கோள்கள் மூலம் காட்டுகிறது.

80 ஆண்டுகளுக்கு முன் பூமி எப்படி இருந்தது தெரியுமா? Time Travel செய்யனுமா! | Time Travel Google Earth Revisit 80 Years Ago

தற்போது பயனர்களை 1930ஆம் ஆண்டுக்கு அழைத்துச் செல்லவுள்ளது. புதுப்பிப்புகளுடன் 80 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று செயற்கைக்கோள் மற்றும் வான்வழி படங்களை பார்ப்பதற்கு உதவுகிறது.

லொகேஷனைக் காட்டிக்கொடுக்கும் வசதி - டெலிகிராம் முக்கிய முடிவு!

லொகேஷனைக் காட்டிக்கொடுக்கும் வசதி - டெலிகிராம் முக்கிய முடிவு!

Time travel

மேலும், நேர வரம்பை திறம்பட இரட்டிப்பாக்குவதுடன், பயனர்களுக்கு "Time travel" மற்றும் இந்த நகர்ப்புற நிலப்பரப்புகளின் பரிணாமத்தை காண ஒரு தனித்துவமான வாய்ப்பையும் அளிக்கிறது.

google earth

இதுகுறித்த அறிவிப்பில் கூகுள் 1938ல் உள்ள சான் பிரான்சிஸ்கோவிற்கும், 2024ல் அதன் தற்போதைய நிலைக்கும் இடையே உள்ள ஒப்பீடுகளை வழங்கியுள்ளது.

அன்று போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்ட கப்பல், தற்போது உணவகங்கள் மற்றும் உல்லாசக் கப்பல்கள் என மாறியுள்ளது. இந்த புதிய அம்சத்தை மொபைல் மற்றும் இணையம் மூலம் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.