யூடியூப் சேனல்களுக்கு ஆப்பு? அதற்கான சரியான நேரம் இதுதான் - உயர்நீதிமன்றம் பரபர கருத்து!

Youtube Tamil nadu Chennai Madras High Court
By Jiyath May 09, 2024 12:00 PM GMT
Report

யூடியூப் சேனல்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

சவுக்கு சங்கர்

பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் சமீபத்தில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார். அதில், காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது புகார் எழுந்தது.

யூடியூப் சேனல்களுக்கு ஆப்பு? அதற்கான சரியான நேரம் இதுதான் - உயர்நீதிமன்றம் பரபர கருத்து! | Time To Restrict Youtube Channels Chennai Hc

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோவை சைபர் கிரைம் போலீசார், தேனியில் வைத்து சவுக்கு சங்கரை கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையின் போது கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் உள்ளிட்ட 3 பேர் மீது தேனி பழனி செட்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்தனர். இதனையடுத்து சவுக்கு சங்கரை கோவை அழைத்து வந்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்து-முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன்; இது என் உறுதிமொழி - பிரதமர் மோடி!

இந்து-முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன்; இது என் உறுதிமொழி - பிரதமர் மோடி!

நீதிபதி உத்தரவு 

மேலும், அவரின் நேர்காணலை வெளியிட்ட பிரபல யூடியூப் சேனல் நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, முன் ஜாமீன் கேட்டு பெலிக்ஸ் ஜெரால்ட் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதி குமரேஷ் பாபு முன் விசாரணைக்கு வந்தது.

யூடியூப் சேனல்களுக்கு ஆப்பு? அதற்கான சரியான நேரம் இதுதான் - உயர்நீதிமன்றம் பரபர கருத்து! | Time To Restrict Youtube Channels Chennai Hc

அப்போது "யூடியூப் சேனல்கள் கட்டுப்பாடுகள் இல்லாமல் ஒழுங்கற்று செயல்படுகின்றன. அதை கட்டுப்படுத்துவதற்கான தகுந்த நேரம் இது. நேர்காணல் அளிக்க வருபவர்களை அவதூறான கருத்துக்களை தெரிவிக்க தூண்டும் நேர்காணல் எடுப்பவர்களை முதல் எதிரியாக சேர்க்க வேண்டும்" என்று நீதிபதி தெரிவித்தார். மேலும், பெலிக்ஸ் ஜெரால்டின் முன் ஜாமீன் மனு மீது ஒரு வார காலத்திற்குள் பதில் அளிக்கும்படி காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.