அடுத்த பொல்லார்டு இவர்தான் - பளீச்னு சொன்ன முன்னாள் வீரர்!
மும்பை இந்தியன்ஸ் அணியின் அடுத்த பொல்லார்டு இவர்தான் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கணித்துள்ளார்.
பொல்லார்டு
ஐபிஎல் தொடரில் 13 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியவர் பொல்லார்டு. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸூக்காகவே இருக்க விரும்புகிறேன் எனக் கூறி ஐபிஎல் ஓய்வை அறிவித்தார்.
அவரின் இந்த முடிவுக்கு சக வீரர்கள் அதிர்ச்சியையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர். மும்பை இந்தியன்ஸ் அணியும் பொல்லார்டின் பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக, தங்கள் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக உடனடியாக நியமித்துள்ளது.
ஹனுமா விஹாரி
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹனுமா விஹாரி, மும்பை இந்தியன்ஸ் அணியில் பொல்லார்டு இல்லாதது மிகப்பெரிய இழப்பு என கூறியுள்ளார். அவரது இடத்தை அணியில் நிரப்புவது கடினம் என்றாலும்,
அந்த வாய்ப்பு டிம் டேவிட்டுக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். டிம் டேவிட்டுக்கு போதுமான வாய்ப்பு கொடுத்தால் பொல்லார்டு செய்த பணியை நிச்சயம் செய்வார் என தெரிவித்துள்