ஐபிஎல் போட்டியிலிருந்து பொல்லார்ட் ஓய்வு - ரசிகர்கள் ஷாக்!
ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக கைரன் பொல்லார்ட் அறிவித்துள்ளார்.
பொல்லார்ட்
ஐபிஎல் மூலம் இந்தியர்களுக்கு நெருக்கமான பொல்லார்ட் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். 2010ஆம் ஆண்டு முதலே ஐபிஎல் மற்றும் சாம்பியன் லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியவர் பொல்லார்ட்.
13 வருடங்களாக மும்பை அணிக்கு விளையாடிய இவர், 5 முறை ஐபிஎல் கோப்பையை மும்பை வெல்ல உதவியாக இருந்துள்ளார். பல முக்கிய போட்டிகளில் இவரது வெறித்தனமான ஆட்டத்தை ரசிகர்கள் கண்டதுண்டு. இந்நிலையில், ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக பொல்லார்ட் அறிவித்துள்ளார்.
ஐபிஎல் - ஓய்வு
மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இது சுலபமான முடிவு இல்லை. இன்னும் சில ஆண்டுகள் நான் விளையாட தயாராக இருந்தேன். இருப்பினும் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் விவாதித்த பிறகு ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வுபெற முடிவெடுத்தேன்.
மேலும், மும்பை அணிக்காக என்னால் விளையாட முடியாது என்றால் அந்த அணிக்கு எதிராகவும் விளையாட என்னால் முடியாது. ஆகவே, ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகப் பணியாற்றவுள்ளேன். மும்பை இந்தியன்ஸ் வீரர் எப்போதும் மும்பை இந்தியன்ஸ் வீரர் தான்.’ என்று தெரிவித்துள்ளார்.
இவரது முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
முன்னதாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக கடந்த ஏப்ரல் மாதம் இவர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.